தற்போது ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்டு இருக்கும் வெங்கடேஷ் ஐயர் விளையாடுவது குறித்து பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்குக்கு முழு நம்பிக்கை இல்லை என அபினவ் முகுந்த் கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை ஆர்சிபி ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதில் ஒரு வினோத நிகழ்வாக கடந்த மெகா ஏலத்தில் இவரை 23 கோடி வரையில் ஆர்சிபி கொல்கத்தா அணியிடம் போட்டியிட்டது. இந்த முறை பதினாறு கோடி ரூபாய் குறைவாக கிடைத்திருக்கிறார்.
படிக்கல் தரும் சோதனை
தற்போது ஆர்சிபி அணிக்கு வெங்கடேஷ் ஐயர் வாங்கப்பட்டிருந்தாலும் கூட, அவரை படிக்கல் விளையாடும் மூன்றாவது இடத்திற்கு விளையாட வைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தற்போது சையத் முஸ்தாக் அலி தொடரிலும் படிக்கல் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். ஆனால் வெங்கடேஷ் ஐயருக்கு சிறப்பான சீசன் கிடைக்கவில்லை.
நடப்பு சையத் முஸ்டாக் அலி தொடரில் படிக்கல் மொத்தம் ஆறு போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் உடன் 61.8 சராசரி மற்றும் 167 ஸ்ட்ரைக் ரேட்டில் 309 ரன்கள் குவித்திருக்கிறார். எனவே ஆர்சிபி பிளேயிங் லெவனில் முதலில் இவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
தினேஷ் கார்த்திக் உறுதியாக சொல்லவில்லை
இது குறித்து இந்திய மற்றும் தமிழ்நாட்டு முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் பேசும் பொழுது “நேற்று எங்களுடன் ஒரு நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் இருந்த பொழுது, நாங்கள் அவரிடம், வெங்கடேஷ் ஐயர் ஆர்சிபி பிளேயிங் லெவனில் இருப்பாரா? என்று கேட்டோம். ஆனால் தினேஷ் கார்த்திக் இது குறித்து எதுவும் உறுதியாக இல்லை. அவர் இந்த கேள்விக்கு எங்களிடம் படிக்கல் தற்போது சிறந்த பாமில் இருப்பதாகத்தான் கூறினார்”
இதையும் படிங்க : சூரியகுமார் சாதாரண வீரர் இல்ல.. 5க்கு 5 அடிப்பாரு.. மோர்கல் செஞ்ச உதவிதான் எனக்கு பெருசு – ஷிவம் துபே பேட்டி
“கடந்த ஆண்டு பார்க்கும்பொழுது வெங்கடேஷ் ஐயருக்கான மதிப்பு படிக்கலை விட அதிகமாக இருந்தது. தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. எனவே வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்தில் ஆர்சிபி ப்ளேயிங் லெவனில் இருக்க முடியாது. மேலும் அந்த அணியில் முதல் ஏழு இடங்களில் விளையாடக் கூடியவர்கள் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறார்கள். எனவே அவர்களை மாற்றக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.






