இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மீண்டும் சிறந்த பேட்டிங் நிலைக்கு வருவார் என சிவம் துபே பத்திரிகையாளர் சந்திப்பில் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணி கடைசியாக விளையாடிய 14 டி20 போட்டிகளில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் 14.36 ஆவரேஜில் 201 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவர் மூன்று அல்லது நான்காவது இடத்தில் வந்து சீக்கிரத்தில் ஆட்டம் இழந்து வெளியேறுவது இந்திய அணிக்கு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.
சூரியகுமாரின் பிரச்சனை
ஒரு அணிக்கு கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் சிறந்த வீரர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இருவரில் ஒருவராவது நல்ல பார்மில் தொடர்ந்து வருவார்கள். இதன் காரணமாக அணியின் நம்பிக்கை அதிகரித்து, அதிகபட்ச போட்டிகளில் வெற்றி பெரும். ஏனென்றால் சிறந்த வீரர்களே இந்த பொறுப்புகளுக்கு வருகிறார்கள்.
இந்திய அணியை பொறுத்தவரையில் தற்பொழுது கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவருமே பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் இருவருமே டாப் ஆர்டரில் இருக்கின்ற காரணத்தினால், இவர்கள் உள்ளே வந்து ஆட்டம் சீக்கிரத்தில் இழந்ததும் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை வேகமாக இழந்து விடுகிறது.
ஐந்து போட்டியையும் வெல்லுவார்
இதுகுறித்து சிவம் துபே பேசும் பொழுது “சூரியகுமார் யாதவ் 5 போட்டிகளில் ஐந்து போட்டியையும் தனி வீரராக வெற்றி பெற்று கொடுக்க கூடியவர். அவர் தற்போது கோல் அடிக்க வில்லை என்றால் அவர் சிறந்த வீரர் இல்லை என அர்த்தம் இல்லை. அவர் சிறந்த வீரர் அவர் செய்வதை நம்மால் யாராலும் செய்ய முடியாது. அவர் நல்ல பார்முக்கு வரும்பொழுது அதிரடியாக இருக்கும்”
இதையும் படிங்க: சிஎஸ்கே ஏலத்தில் ஒரு பெரிய தப்பை செய்து விட்டது.. இந்த மூணு பேரும் ஆடியே ஆகணும் – ஸ்ரீகாந்த் கருத்து
“அவர் சரியாக விளையாடாவிட்டாலும் அவர் சிறந்த வீரர்தான். அவர் அணிக்காக ஏதாவது புதுமையாக செய்ய எப்பொழுதும் முயற்சி செய்கிறார். அவர் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார். அவர் தற்போது சிறப்பாக விளையாட விட்டாலும் அவரது புள்ளிவிவரத்தில் பாதிப்பு இல்லை. ஏனென்றால் இந்தியாவுக்காக பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் எங்களுடைய உலக கோப்பை திட்டத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. நான் என்னுடைய தனிப்பட்ட திட்டங்கள் குறித்து மோர்கல் உடன் தொடர்ந்து பேசியது பலன் அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






