முதல்ல நாங்க இந்த விஷயத்தை செய்யறோம்.. எங்களுக்கு பெரிய பிரச்சனையா அதுதான் இருக்கு – ராகுல் டிராவிட் பேச்சு

0
26
Dravid

இந்திய அணியின் நாளை டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணி குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி அளித்திருக்கிறார்.

இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடி நாக் அவுட் சுற்றில் தோற்று உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து இழந்து வருகிறது. இது தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தையும் கடுமையாக மன உளைச்சல் அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றுமா? என்கின்ற சந்தேகம் எப்பொழுதும் இருந்து வருகிறது. இத்துடன் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக யார் வருவார்கள்? என்பதும் சந்தேகமாக இருந்து வருகிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ராகுல் டிராவிட் “துவக்க ஆட்டக்காரர்களுக்கு எங்களுக்கு ஆப்ஷன்கள் இருக்கிறது. நாங்கள் யார் விளையாடுவார்கள்? என்று கூறப்போவதில்லை. நமக்கு தற்பொழுது துவக்க இடத்திற்கு மூன்று வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் நாம் செல்லக்கூடிய போட்டி மற்றும் கண்டிஷனை பொறுத்து யார் விளையாடுவார்கள்? என்பது முடிவு செய்யப்படும்.

எங்கள் அணியின் நிலைத்தன்மையான செயல்பாட்டின் அடிப்படையில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறினோம், அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்தோம், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்தோம். நாங்கள் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடுகிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க: 9 ரன் 5 விக்கெட்.. 9 பேர் ஒற்றை இலக்கம்.. உகாண்டா அணியை சுருட்டி வீசிய ஆப்கானிஸ்தான்.. டி20 உலககோப்பை

நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களால் நாக் அவுட் போட்டியில் கோட்டை தாண்ட முடியவில்லை. அந்தக்கடைசி ஆட்டத்தில் எங்களால் செயல்படுத்த முடியவில்லை. மீண்டும் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுவோம் என்று நம்புகிறோம். அதற்குப் பிறகு குறிப்பிட்ட நாளில் கோட்டை தாண்டுவதற்கு முயற்சி செய்யலாம்” என்று கூறி இருக்கிறார்.