9 ரன் 5 விக்கெட்.. 9 பேர் ஒற்றை இலக்கம்.. உகாண்டா அணியை சுருட்டி வீசிய ஆப்கானிஸ்தான்.. டி20 உலககோப்பை

0
172
Afghanistan

இன்றைய டி20 உலகக் கோப்பை தொடரில் சி பிரிவில் உகாண்டா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான அணி மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வென்று அசத்தி இருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற உகாண்டா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு அனுபவம் மிக்க குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜட்ரன் இருவரும் களம் இறங்கினார்கள். வழக்கம்போல ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த துவக்க ஜோடி சிறப்பாக விளையாடி நல்ல துவக்கத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த ஜோடி வெறும் 88 பந்துகளில் 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இப்ராஹிம் ஜட்ரன் 46 பந்தில் 70 ரன்கள், குர்பாஸ் 45 பந்தில் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த ஜோடி ஓவருக்கு 10 ரன்கள் வீதம் எடுத்து வந்தது. எனவே ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்களை எளிதாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது நபி மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் அதிரடியாக விளையாட முடியவில்லை. திடீரென ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தார்கள். இறுதியாக 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அனுபவம் இல்லாத உகாண்டா அணி சீட்டு கட்டு போல அப்படியே மொத்தமாக சரிந்தது. அந்த அணியில் ரிஷாத் அலி ஷா மட்டுமே 11 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். மொத்தம் அந்த அணியில் ஒன்பது பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார்கள். இறுதியில் உகாண்டா அணி அனைத்து விக்கெட்டுகளையும் 16 ஓவர்களில் இழந்து 58 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ.. நாளை இந்தியா அயர்லாந்து போட்டி.. மழைக்கான வாய்ப்பு மற்றும் ஆடுகள நிலவரம்.. முழு விபரம்

இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான அணியின் இடது கை வேகப் பந்துவீச்சாளர் பரூக்கி நான்கு ஓவர்கள் பந்துவீசி வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டு தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மேலும் நவீன் உல்ஹக் மற்றும் ரஷீத் கான் இருவரும் தல இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.