148 வருடம்.. 8 சதங்கள்.. இங்கிலாந்து ஒல்லி போப் படைத்த ஆச்சரிய சாதனை.. ஒரே ஒரு டெஸ்டில் சுவாரசியம்

0
419
Pope

தற்போது இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்தின் ஒல்லி போப் சதம் அடித்து முதல் முறையாக ஒரு வித்தியாசமான சாதனையை படித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக, தற்போது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டு வருகிறது.

- Advertisement -

அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிரவுலி 171 பந்துகளில் 124 ரன்கள், பென் டக்கேட் 134 பந்தில் 140 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்தின் இந்த துவக்க ஜோடி 200க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப் அமைத்து வலிமையான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தது. நேற்று இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் குறித்து இருந்தது.

இன்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் வந்த துணை கேப்டன் ஒல்லி போப் 166 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 171 ரன்கள் அதிரடியாக குவித்து அசத்தினார்.

- Advertisement -

ஒல்லி போப் வித்தியாச சாதனை

மேலும் இந்த சதம் அவருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது சதமாக அமைந்தது. மேலும் அவர் அடித்த இந்த எட்டு சதங்களுமே எட்டு வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக அடிக்கப்பட்டு இருக்கிறது. அவர் அயர்லாந்து, இந்தியா, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, சவுத் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே என எட்டு நாடுகளுக்கு எதிராக சதம் அடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. ஆர்சிபி அணி இம்முறை வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன? ரஜத் பட்டிதார் சொன்ன ரகசியம்

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக நாடுகளுக்கு எதிராக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒல்லி போப் இந்த சாதனை மிகவும் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. தனது முதல் எட்டு சதங்களையும், எட்டு வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக அடித்தது மட்டுமில்லாமல், அதிக நாடுகளுக்கு எதிராக சதம் அடித்த சாதனையாகவும் இது மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -