இந்திய அணியில் மாற்றம் ஆரம்பிச்சாச்சு.. டிரெஸ்ஸிங் ரூமில் இவர்களுக்கு மட்டுமே இடம் – கம்பீர் பேச்சு

0
79
Gambhir

இந்திய டெஸ்ட் அணியில் ஏற்கனவே மாற்றங்கள் ஆரம்பித்து விட்டதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிரடியாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் துவங்கி இருக்கிறது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டனுக்கு பதிலாக பயிற்சியாளர் கம்பீர் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் மாற்றங்கள்

தற்போது இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடும் விதத்தில் கம்பீர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார். வீரர்கள் கொடுக்கப்படும் திட்டத்தை மீறி அவர்களுடைய தனித்திட்டத்தை வைத்துக்கொண்டு விளையாடுவது அவரை கோபப்படுத்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் பேசி இருக்கும் கம்பீர் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதாகவும், யார் சரியாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் இடம் இருக்கும் என்றும் அதிரடியாக தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த மாற்றம் எப்படி ஆனது என்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சீனியர் வீரர்களை வெளியே அனுப்புவதா?

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “உங்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். டிரெஸ்ஸிங் ரூமில் நேர்மையானவர்கள் இருக்கும் வரையில், இந்திய கிரிக்கெட் எப்பொழுதும் பாதுகாப்பான கைகளில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். எந்த மாற்றத்திற்கும் நேர்மை மிக முக்கியமானது. இது மூத்த வீரர்களை படிப்படியாக வெளியேற்றுவது அல்லது இளம் வீரர்களுக்கு முழுவதாக வாய்ப்பு கொடுப்பது பற்றியது கிடையாது. நீங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் நல்ல முறையில் பர்பாமன்ஸ் செய்தால் மட்டுமே இருக்க முடியும்”

இதையும் படிங்க : கம்பீருக்கு அந்த விஷயம் எல்லாமே தெரியும்.. அப்புறம் ஏன் விராட் கோலி கிட்ட பேசவே இல்ல? – சுனில் கவாஸ்கர் கேள்வி

“மாற்றம் ஏற்படும் காலம் எப்பொழுதும் உற்சாகமான ஒன்று. முன்பு இந்திய அணிகள் மாற்றம் என்பது பேட்டிங் துறையில் மட்டுமே ஏற்பட்டதாக பார்த்தேன். ஆனால் இப்போது அப்படி இல்லாமல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய தொடரில் சில நல்ல இளம் வீரர்களை பெற்று இருக்கிறோம். பந்துவீச்சில் ஆகாஷ் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக வழிபட்டு இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -