பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெருமையை மீட்க.. இந்த 3 மாற்றத்தை செய்யணும் – கேரி கிரிஸ்டன் கோரிக்கை

0
1477
Pakistan team and Gary Kirsten

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியைச் சந்தித்து தற்போது பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் அணியின் முன்னேற்றம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீப காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அந்த அணியில் வலுவான வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என அனைத்தும் நன்றாக இருந்தாலும் ஒற்றுமையாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படாத காரணத்தால் சிறிய அணிகளுக்கு எதிராக கூட தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளோடு தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. வங்கதேச அணியிடம் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலையில் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் அணியில் முன்னேற்றம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த அற்புதமான நேரத்தில் இணைப்பு முகாமின் ஒரு பகுதியாக இருப்பது சிறப்பாக உள்ளது. அணிக்காக எங்களது நோக்கங்களை சீரமைப்பதே முக்கியமாக நான் நினைக்கிறேன். அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே அணி மற்றும் வீரர்களின் தொழில் முறை நிலைமைகளின் அடிப்படையில் ஒரு விஷயம் முக்கியமாக உள்ளது.

மேலும் அர்ப்பணிப்பு உணர்வோடு தேசத்திற்காக தங்களை முன்னிறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து ஒரு வெற்றிகரமான அணியை உருவாக்க விரும்புகிறோம். மேலும் அவர்கள் விளையாடும் எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறோம். அது முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. இது அனைத்து வடிவங்களிலும் மிகவும் திறமையான கிரிக்கெட் அணி.

இதையும் படிங்க:12 ரன் 7 விக்கெட்.. முன்னாள் ஆஸ்திரேலிய வீரரின் மகன் அசத்தல் சாதனை.. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

ஆனால் நடைமுறையில் செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக போட்டியிடும் போது அணுகு முறையில் எங்கள் அணி ஒன்றுபட்டுள்ளது என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடும் போது தொழில்முறை, அணிக்காக விளையாடும் பெருமை, மற்றும் ஒற்றுமை இந்த மூன்று முக்கிய பண்புகள் அவசியமாகும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -