ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஆஸ்திரேலியா டொமஸ்டிக் ஒருநாள் கோப்பை 2024 – 2025ன் இரண்டாவது ஆட்டத்தில் விக்டோரியா அணியின் பந்துவீச்சாளர் சாமுவேல் எலியாட்டின் அபாரமான பந்துவீச்சால் டாஸ்மாடியா அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட சாமுவேல் எலியட் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஒரு நாள் கோப்பை தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற விக்டோரியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் பேட்டிங் களமிறங்கிய டாஸ்மானியா அணி 30.1 ஓவரில் பத்து விக்கெட்டுகளை மொத்தமாக இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது.இதில் அதிகபட்சமாக டாஸ்மானியா அணியின் மூன்றாவது பேட்ஸ்மேன் வெதரால்டு 31 பந்துகளுக்கு 31 ரன்கள் குவித்தார்.
இதில் பந்து வீச்சில் விக்டோரியா அணியின் சாமுவேல் எலியட் 8 ஓவர்களில் இரண்டு ஓவர்கள் ரன்கள் எதுவும் கொடுக்காமல் மொத்தமாக 12 மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய விக்டோரியா அணி 26.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பேட்டிங்கிலும் கலக்கிய சாமுவேல் எலியட் மூன்று பவுண்டரிகளோடு 19 ரன்கள் குவித்தார்.
இந்த பார்மெட்டில் எலியாட்டின் 11 வது ஆட்டம் இதுவாகும்.இதற்கு முன்னதாக 2012ஆம் ஆண்டு இதே விக்டோரியா அணிக்காக விளையாடிய ஜான் ஹோலெண்டின் 6-29 ரன்கள் என்ற சாதனையை சாமுவேல் எலியாட் தற்போது முறியடித்திருக்கிறார். இந்தத் தொடரில் இது இவரது இரண்டாவது சிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது.
2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் ஷான் டெய்ட் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்குப் பிறகு 1989ஆம் ஆண்டு கார்ல் ராக்மேன் 34 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது இரண்டாவது சாதனையாக அமைந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தப்பிச்சிட்டாரு.. அஸ்வின் எங்க நாட்டு பிளேயரா இருந்தா.. பாவம் அவருக்கு இதான் நடந்திருக்கும் – மாண்டி பனேசர் பேட்டி
தற்போது 24 வயதாகும் ஷாம் எலியட் 1997 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ எலியட்டின் மகன் ஆவார். அவர் அந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹெடியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 199 ரன்கள் குவித்ததுடன் மொத்தமாக 556 ரன்கள் குவித்திருக்கிறார்.