கேப்டன் தேவையில்லை கோச் நான் இருக்கேன்.. ரோகித் ஆடறத முடிவு செய்யல.. காரணம் இதான் – கம்பீர் பேட்டி

0
1379
Gambhir

நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிட்னி மைதானத்தில் விளையாடுகிறது. இதற்கு முன்பான சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்துக் கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக அணிக்குள் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

நேற்று கசிந்த செய்திகள்

நேற்று சமூக வலைதளங்களில் கம்பீர் இந்திய ஓய்வறையில், வீரர்களிடம் இனி திட்டமிட்டபடி விளையாட வேண்டும், வீரர்கள் தனி திட்டத்துடன் விளையாடக் கூடாது, அப்படி செய்தால் அவர்கள் நீக்கப்படுவார்கள் என கடுமையாக கூறியதாக செய்திகள் வந்தன.

மேலும் ஆஸ்திரேலிய தொடருக்கு புஜாராவை கம்பீர் கேட்டு, அதை தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் வந்தது. வீரர்கள் செயல்பாட்டாலும், தேர்வுக் குழுவின் பிடிவாதத்தாலும் கம்பீர் தற்பொழுது மிகவும் அதிருப்தியில் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் கேப்டனுக்கு பதிலாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு கம்பீர் வந்தது இன்னும் கூடுதல் யூகங்களை உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

இதெல்லாம் மரபென்று நினைக்கவில்லை

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டனுக்கு பதிலாக பயிற்சியாளர் வந்தது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு “கேப்டன்தான் வரவேண்டும் அதுதான் மரபென்று நான் நினைக்கவில்லை. இப்போது இந்த இடத்தில் நான் இருக்கிறேன் இது போதுமானது என்று நான் நினைக்கிறேன். மேலும் ரோஹித்துடன் எல்லாமே நல்ல முறையில் தான் சென்று கொண்டிருக்கிறது” என்று அதிரடியாக பதில் அளித்தார்.

இதையும் படிங்க : வெறும் 7 ரன்.. திரில் டி20 போட்டியில் இலங்கை வெற்றி.. சிஎஸ்கே ரச்சின் போராட்டம் வீண்.. தொடரை வென்ற நியூசிலாந்து அணி

இதைத்தொடர்ந்து நாளை பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பொழுது “நாளை ஆடுகளத்தின் தன்மையை பரிசோதித்த பிறகே எல்லாம் முடிவு செய்யப்படும். இது ரோஹித் சர்மாவுக்கும் பொருந்தும்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் தற்பொழுது அணியின் முழு பொறுப்பும் கம்பீர் வசம் வந்திருப்பதாக தெரிகிறது. அணியின் கேப்டன் விளையாடுவதையே இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் கூறுவதை பார்க்கும் பொழுது, அணியில் நிறைய பிரச்சனை செல்வதாக தெரிகிறது.

- Advertisement -