வெறும் 7 ரன்.. திரில் டி20 போட்டியில் இலங்கை வெற்றி.. சிஎஸ்கே ரச்சின் போராட்டம் வீண்.. தொடரை வென்ற நியூசிலாந்து அணி

0
389

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிற நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி பெரும் 7 ரன் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றியை ருசித்துள்ளது.

- Advertisement -

இலங்கை நியூசிலாந்து மூன்றாவது டி20

இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் தான் சென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிசான்கா மற்றும் மெண்டிஸ் ஆகியோர் விரைவாக வெளியேறினாலும் அதற்கு பின்னர் களம் இறங்கிய குசால் பெரேரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெறும் 46 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 13 பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் என 101 ரன்கள் குவித்து அபார சதத்தை நிறைவு செய்தார். மிடில் வரிசைகள் களம் இறங்கிய கேப்டன் அசலங்கா அதிரடியாக விளையாடி 24 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பௌண்டரி மற்றும் ஐந்து சிக்சர் என 46 ரன்கள் குவிக்க இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குறித்தது. அதற்குப் பிறகு நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது.

- Advertisement -

ரச்சின் ரவீந்த்ரா போராட்டம்

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ராபின்சன் மற்றும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரச்சின் ரவிந்த்ரா ஆகியோர் களமிறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 81 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ராபின்சன் 37 ரன்னில் வெளியேறினாலும் ரவீந்திர அதிரடியான ஆட்டத்தை மேற்கொண்டார்.

இதையும் படிங்க:முக்கிய பவுலர் காயம்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. பெரிய சிக்கலில் ரோகித் சர்மா.. ஆஸி கடைசி டெஸ்ட்

39 பந்துகளை எதிர் கொண்டு 5 போர் 4 சிக்ஸ் என 69 ரன்கள் குவித்து வெளியேற அதற்குப் பிறகு களம் இறங்கிய வீரர்கள் விரைவாக வெளியேறினார்கள். இதில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் டாரில் மிச்சல் மட்டுமே 17 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 தேவைப்பட நியூசிலாந்து அணியால் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

- Advertisement -