மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படையான சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அணியில் விளையாடும் வாய்ப்புகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓப்பனிங் களமிறங்குவதால், ஜெய்ஸ்வாலுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சவாலாக மாறியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும்போது “யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த தொடரில் விளையாடும் வாய்ப்பு அதிகம் கிடைக்காது, அவர் காத்திருக்க வேண்டியதுதான். ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் ஓப்பனர்களாக ஆடுவதால், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது மிகவும் கடினம்.
“அவர் திறமையான பிளேயர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் தற்போதைய இந்திய அணியின் காம்பினேஷன் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது” என்று கூறி இருக்கிறார்.