மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியில் புதிதாக இடம் பிடித்துள்ள இளம் வீரரின் பேட்டிங் திறன் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளதால், அணியின் காம்பினேஷன் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற இருக்கும் இளம் பிளேயர்கள் பிளாட் விக்கெட்டுகளில் தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும்போது “ஆழமாக யோசித்துப் பார்த்தால், எனக்குள்ளும் சிறிய கவலை இருக்கிறது. நியூசிலாந்து போன்ற கண்டிஷனில் அவர் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது, அங்குள்ள சூழ்நிலைக்கு அவர் மிகவும் பொருத்தமானவர்”
“ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த பிளாட் விக்கெட்டுகளில் அவர் எப்படி விளையாடப் போகிறார்? இங்கு பேட்டிங் செய்வதற்கு சிறப்பான டெக்னிக் மற்றும் ஷாட் மேக்கிங் தேவை, அதில் அவர் எப்படி செயல்படுவார் என்பதில் எனக்கு லேசான சந்தேகம் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.