” இவரின் வேகம் என்னை ஆச்சரியப் படுத்தியது ” – இளம் இந்திய வேகப் பந்துவீச்சாளர் குறித்து பெங்களூர் கேப்டன் டு பிளசிஸ் புகழாரம்

0
448
Faf du Plessis RCB

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதல் முறையாக தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ் தலைமை தாங்குகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடர் உடன் விராட் கோலியை தன்னுடைய கேப்டன் பதவியை விராட் கோலி முடித்துக் கொண்டார். இதனையடுத்து பெங்களூரு அணி நிர்வாகம் தென்ஆப்ரிக்க வீரர் ஃபேப் டு பிளேசிஸ்சை புதிய கேப்டனாக சில நாட்களுக்கு முன்னர் நியமித்தது.

தற்பொழுது பெங்களூரு அணி வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர். அணி வீரர்களுக்குள்ளையே இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அப்படி நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டு பிளேசிஸ்சை ஒரு வீரர் கவர்ந்துள்ளார்.

- Advertisement -
அவருடைய வேகம் அபாரமாக இருக்கிறது

இது சம்பந்தமாக பேசியுள்ள ஃபேப் டு பிளேசிஸ் “தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த வீரர் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் என்னை ஒரு இளம் வீரர் பெரிதும் கவர்ந்து உள்ளார். அவர் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப். அவருடைய வேகப்பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது.சரியான வேகத்தில் அதேசமயம் சரியான நீளத்தில் அவர் பந்து வீசுகிறார்” என்று ஃபேப் டு பிளேசிஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

25 வயதான ஆகாஷ் தீப் பீகாரில் பிறந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். டொமஸ்டிக் லெவல் ஆட்டங்களில் அவர் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 21 டி20 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை கைபற்றி இருக்கிறார். கடந்த ஆண்டும் இவர் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி ஆட்டம் குறித்து பேசியுள்ள ஹர்ஷால் பட்டேல் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை வென்ற ஹர்ஷால் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு மிகத் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். நாங்கள் ஒரு குழுவாக விஷயங்களை திட்டமிட்ட விதம் மகிழ்ச்சியாக உள்ளது. நாளுக்கு நாள் எங்களுடைய ஆட்டம் தீவிரமடைந்து தொடரை எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதேபோல தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் “ஃபீல்டிங் பயிற்சி அற்புதமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அதில் இன்னும் தீவிரத்தை அதிகப் படுத்த விரும்புகிறோம். ஒட்டுமொத்தமாக முதல் பயிற்சி ஆட்டம் நல்லவிதமாக நடந்து முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதனுடைய முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வருகிற 27-ஆம் தேதி அன்று இரவு 7:30 மணி அளவில் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.