தற்பொழுது இந்தியாவில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைத்தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கு அடுத்து அடுத்த வருடம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு எல்லா உலக அணிகளும் தயாராகும்.
இதற்கு ஏற்ற வகையில் எல்லா அணிகளும் அதிகப்படியாக டி20 கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடும்.
இந்த வகையில் உலககோப்பை முடிந்ததும் இந்திய அணி டி20 கிரிக்கெட் முக்கியத்துவம் தரும் விதமாக, உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்தத் தொடர் நாளை ஆரம்பித்து டிசம்பர் மூன்றாம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இதற்கடுத்து இந்தியா அணி கிளம்பி தென் ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தொடங்க உள்ள தொடர் குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ரிங்கு சிங், திலக் வர்மா முக்கியமானவர்கள்.இது ஒரு பெரிய தொடர். ரிங்கு சிங் இதற்கு முன்பு கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும் பெரிய அளவில் விளையாடியிருக்கிறார். கீழ் வரிசையில் அவர் ரன்கள் அடித்தார். அவருக்கு இது முக்கியமான தொடர்.
திலக் வர்மாவும் தனக்கு வேலை கொடுத்த பொழுது அதை சரியாக செய்தார். அயர்லாந்து தொடர் நன்றாக இல்லை. ஒருவேளை இருந்திருந்தால் அவர் உலகக் கோப்பை திட்டத்தில் இருந்திருப்பார். இறுதிப் போட்டியிலும் கூட விளையாடி இருப்பார். அவருக்கு இது முக்கியமான தொடர்.
இந்த முறை வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் ரவி பிஸ்னோய் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் செல்கிறார்கள். இங்கு வாஷிங்டன் சுந்தர் காயம் பிரச்சனை கொண்டவர். அக்சர் படேலும் காயத்தால் உலக கோப்பையை தவறவிட்டார்.
சிவம் துபேவுக்கு இது மிக முக்கியமான தொடர். அவருக்கு ஐந்து போட்டிகள் இருக்கிறது. அவர் கொஞ்சம் பந்தும் வீசக்கூடியவர். இம்பேக்ட் பிளேயர் விதியால் அவர் ஐபிஎல் தொடரில் பந்து வீசவில்லை. உண்மை என்னவென்றால் இங்கு ஹர்திக் பாண்டியாவுக்கு!” மாற்று தேவை என்று கூறி இருக்கிறார்!






