ஹர்திக் பாண்டியா செய்த மெகா சொதப்பல்.. வச்சு செய்த ரகானே.. பரிதாபமாக நின்ற ரோகித் – என்ன நடந்தது?

0
4
Hardik

தற்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த மெகா சொதப்பல் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரன்கள் குவித்து இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பீல்டிங் செய்ய ரோஹித் சர்மா உள்ளே வர, இம்பேக்ட் பிளேயராக சூரியகுமார் யாதவ் வெளியில் அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -

கொல்கத்தா ரன் குவிப்பு

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் 17 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள், கேப்டன் ரகானே 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து ரகுவன்சி 29 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள், ரிங்கு சிங் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள் உடன் 33 ரன்கள் எடுத்தார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. சர்துல் தாகூர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா மெகா சொதப்பல்

இந்த போட்டியில் முதல் ஓவரை ட்ரண்ட் போல்ட் வீச இரண்டாவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஆனால் மூன்றாவது ஓவருக்கு ட்ரண்ட் போல்டை கொண்டு வராமல் அல்லா கசன்பருக்கு கொடுக்க அந்த ஓவரில் 17 ரன்கள் சென்றது. மீண்டும் நான்காவது ஓவருக்கு தானே வந்த ஹர்திக் பாண்டியா 27 ரன்கள் கொடுத்தாங்க. இதனால் உடனடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரன் வேகம் அதிகரித்தது.

இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு தோனி ஆட வேண்டியதே இல்லை.. கெத்தான 12 வீரர்கள்.. வேற லெவல் பிளேயிங் XI.. முழு அலசல்

முதலில் பந்து வீசும் பொழுது பும்ராவுக்கு தாராளமாக பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் கொடுக்கலாம். ஹர்திக் பாண்டியா அதையும் செய்யாமல், ட்ண்ட் போல்டையும் இரண்டு ஓவர்களுக்கு பயன்படுத்தாமல் மெகா சொதப்பலை மீண்டும் செய்தார். கடந்த ஐபிஎல் தொடரிலும் பவுலர்களை பயன்படுத்துவதில் ஹர்திக் பாண்டியா மிக மோசமான முறையில் செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -