ரோகித் சர்மா, இஷான் கிஷன் கிடையாது .. மும்பை இந்தியன்ஸ் ஜெயிக்கணும்னா இவன் ஒழுங்கா ஆடனும்! – எச்சரித்த சுனில் கவாஸ்கர்!

0
2228

சென்னை பிட்ச்சில் வித்தியாசமான ஷார்ட்கள் ஆடுகிறேன் என்று விக்கெட்டை இழக்க வேண்டாம். சுதாரித்து ஆடுங்கள் என்று மும்பை இந்தியன்ஸ் வீரரை எச்சரித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே-ஆப் சுற்றுக்குள் வந்திருக்கிறது இந்த வருட ஐபிஎல் சீசன். முதல் குவாலிபயர் போட்டியில் பலம் மிக்க குஜராத் அணியை வீழ்த்தி முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

- Advertisement -

அதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்கள் பிடித்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது குவாலிபயர் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

இந்த சீசன் முழுவதும் பெரும்பாலும் பேட்டிங்கை நம்பி இருந்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை போன்ற பிட்ச்சில் முழுமையாக பேட்டிங்கை நம்பி இருந்திட முடியாது. பந்துவீச்சை சோதிக்கும் பிட்ச்சாக சென்னை சேப்பாக்கம் பிட்ச் இருக்கும். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவ் சுதாரித்து விளையாட வேண்டும் என்று எச்சரித்துள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

“சூரியகுமார் யாதவ் இந்த சீசனின் இரண்டாம் பாதியில் அபாரமாக விளையாடியிருக்கிறார். பல வித்தியாசமான ஷாட்கள் விளையாடி பந்துவீச்சாளர்களை திணறடித்து மும்பைக்கு வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறார். அவர் பெரிதாக விளையாடிய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சிக்கலின்றி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

பெரும்பாலும் பேட்டிங் சாதகமான பிட்ச்சில் அவர் விளையாடியுள்ளார். ஸ்லோ மற்றும் டர்ன் ஆகக்கூடிய பிட்ச்சில் அவரது பேட்டிங்கை சுதாரித்து விளையாட வேண்டும். மற்ற பிட்ச்சுகள் போல வித்தியாசமான ஷாட்கள் விளையாடிடக்கூடாது. சென்னை போன்ற பிட்ச் ஸ்லோ மற்றும் டர்ன் ஆகக்கூடியது. அங்கு கணித்து விளையாட வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவரது விக்கெட் மிகவும் முக்கியமானது. ஆகையால் அவர்கள் சரியான திட்டத்துடன் களமிறங்குவார்கள் என்று நினைக்கிறேன்.” என சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.