“அவ்வளவு திறமை இருந்தும் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்குறது இந்த வீரர்தான” – ஏபி.டிவில்லியர்ஸ் ஆதங்கம் “

0
2337

இந்தியன் பிரிமியர் லீக் சீசன் 16 நேற்று நடைபெற்ற குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது .

இந்தப் போட்டியில் மும்பை அணியின் சூரியகுமாரி யாதவ் அபாரமாக ஆடி சதம் எடுத்தார் . 219 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய குஜராத் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவாக வெளியேறிய நிலையில் டேவிட் மில்லர் சிறப்பாக ஆடி 44 ரன்கள் எடுத்தார் . மேலும் குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் ரஷீத் கான் 32 பந்துகளில் பத்து சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகளின் உதவியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் விளக்காமல் இருந்தார் .

- Advertisement -

இவரது அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி மிகப்பெரிய தோல்வியில் இருந்து தப்பித்தது . கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் டேவிட் மில்லர் குஜராத் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் . அந்த அணிக்கு பினிஷர் ரோலில் நிறைய போட்டிகளை வென்றும் கொடுத்து இருக்கிறார். ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணிக்கு அறிமுகமான இவர் 2020 மற்றும் 21 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார் . ஆனால் பெரும்பாலான போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை .

கடந்த ஆண்டு ஏலத்தின் போது மூன்று கோடி ரூபாய்க்கு குஜராத் அணி டேவிட் மில்லரை ஏலத்திற்கு எடுத்தது . பல நெருக்கடியான நேரங்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றவர் . இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி.டி வில்லியர்ஸ் டேவிட் மில்லர் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .

அந்தப் பேட்டியில் பேசி இருக்கும் டிவில்லியர்ஸ் ” ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமான திறமைகளை வைத்திருந்தும் மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் வீரர் டேவிட் மில்லர் தான் என தெரிவித்திருக்கிறார் . அவர் தற்போது வாங்கி வரும் சம்பளம் அவரது திறமைக்கு மிகவும் குறைவான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார் ஏபி.டிவில்லியர்ஸ் .

- Advertisement -

மேலும் இது பற்றி பேசி இருக்கும் அவர் ” அவர் ஏன் இவ்வளவு குறைவான சம்பளம் வாங்குகிறார் என்று எனக்கு புரியவில்லை. அவருடைய திறமைக்கு ஏற்ற சம்பளம் இதுவரை ஐபிஎல் இல் அவருக்கு கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த பினிஷர்களில் ஒருவராக டேவிட் மில்லர் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான இவர் இதுவரை 116 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிருக்கிறார் .2697 கண்களை குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதில் 12 அரை சதங்களும் ஒரு சதமும் அடக்கம் . 2013 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக இவர் எடுத்த 101 ரன்கள் இவருக்கு கில்லர் மில்லர் என்ற பட்டத்தை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது .