விராட்டோ ரோகித்தோ இல்லை; இவர் தான் இந்திய அணியின் முக்கிய வீரர்- ஆகாஷ் சோப்ரா விளக்கம்!

0
56
Aakash chopra

ஒரு அணிக்கு ஆல்ரவுண்டர் என்பது மிகப்பெரிய சொத்து. அந்த ஆல்ரவுண்டர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தால் இன்னும் கூடுதல் பலம் அணிக்கு கிடைக்கும். இந்த வகையில் இந்திய அணிக்கு கபில்தேவ் தான் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார். இதற்கடுத்து பார்த்தால் இர்பான் பதான் வந்தார். ஆனால் இவர் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

இவர்கள் இருவருக்கு பிறகு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இருப்பவர் ஹர்திக் பாண்டியாதான். ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அணிக்கு மிகப்பெரிய வெற்றிகளை கொண்டு வரக்கூடியவர் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி ஹர்திக் பாண்டியாவை தனி கவனத்தோடு வழிநடத்தி வந்தார்.

- Advertisement -

இந்திய அணிக்கு களத்தில் பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என மூன்றிலும் மிகப்பெரிய பங்களிப்பை ஹர்திக் பாண்டியா கொடுத்து வந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட முதுகு காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கிவிட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து திரும்பியவர் எதிர்பார்த்ததுபோல் பழையபடி சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால் தன்னை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு உடற் தகுதியை மேம்படுத்த சென்றவர் இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக வந்தார்.

இதிலிருந்துதான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி ஆரம்பித்தது. களத்தில் ஒரு கேப்டனாக பேட்ஸ்மேனாக பவுலராக தானே முன்னின்று எதையும் செய்து அணியை வழி நடத்தினார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 15 ஆட்டங்களில் 487 ரன்களை அடித்தார். இதில் அதிகபட்சம் 87*. இதில் நான்கு முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார். ஒருவன் சராசரி 44. ஸ்ட்ரைக் ரேட் 131. இறுதி ஆட்டத்தில் குறிப்பிடத்தக்க ரன்களை அடித்து பவுலிங்கில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி குஜராத் தனி சாம்பியனாக முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணிக்கு திரும்பி வந்த அவர் பழையபடி இல்லாமல் இன்னும் சிறப்பாக அணிக்கு தன் பங்களிப்பை அளித்து வருகிறார். முன்பை விட அவரது பேட்டிங் முதிர்ச்சி அடைந்து இருக்கிறது. பௌலிங்கும் மிகவும் கூர்மை அடைந்திருக்கிறது. இந்திய அணியின் வெற்றிகளில் ஒரு முக்கிய காரணமாக அணிக்குள் பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என பங்களிப்பை செய்து வருகிறார்.

தற்போது இவரை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசி இருக்கிறார். அதில் அவர் ” ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசுவது ஒரு இன்சூரன்ஸ் பாலிசி போல. அவர் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளுங்கள். இந்திய அணிக்கான சமநிலையை தருவது அவர் மட்டும்தான். அணிக்குள் அவர் இல்லாமல் போனால் இதுவரை தேக்கி வைத்திருந்த அத்தனை திட்டங்களும் சிதைந்து போகும். ரோகித் சர்மா விராட் கோலி ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கும் ஆற்றை உங்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இவருக்கு அப்படி ஒரு வீரர் இல்லை. இவர் இல்லை என்றால் வலிமையான ஒரு இந்திய பிளேயிங் லெவனை உருவாக்குவது கடினம்” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய ஆகாஷ் சோப்ரா ” அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் பந்துவீசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இலங்கை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக அவர் முழு அவர்களையும் வீச வேண்டிய அவசியமில்லை. அவரை இந்திய அணி நியாயமாக பயன்படுத்த வேண்டியது கடமை” என்றும் கூறியிருக்கிறார்!

- Advertisement -