எங்கள் அணியின் ஏபி டிவிலியர்ஸ் இவர்தான்; 360 டிகிரியில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர் – லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பெருமிதம்

0
128
KL Rahul Lucknow Supergiants

நேற்று லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 55 ரன்களும், ஆயுஷ் பதோனி 54 ரன்களும் குவித்தனர்.

பின்னர் விளையாடிய குஜராத் ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் மேத்யூ வேட் துணையோடு வெற்றியை நோக்கி நகர்ந்தது. குறிப்பாக ராகுல் தெவாட்டியா டேவிட் மில்லர் ஆட்டத்தை இரண்டு ஓவர்களில் (16 மற்றும் 17ஆவது ஓவர்) மாற்றினர். இருவரில் குறிப்பாக 24 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடித்து 40* ரன்களுடன் இறுதி வரை ராகுல் தெவாட்டியா ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

19.4 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து கேஎல் ராகுல், டீ காக் மற்றும் மனிஷ் பாண்டே விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அவர்தான் எங்கள் அணியின் பேபி டிவில்லியர்ஸ்

லக்னோ அணி 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்த நிலையில் இளம் வீரர் ஆயுஷ் பதோனி எந்த வித அழுத்தமும் இன்றி மிக இலகுவாக நேற்று விளையாடினார். முப்பத்தி எட்டு பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நேற்றைய ஆட்டத்தில் 41 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடித்து 54 ரன்கள் அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டம் முடிந்ததும், ஆயுஷ் பதோனி குறித்து பெருமையாக பேசினார்.”எங்கள் அணியின் பேபி டிவில்லியர்ஸ் அவர்தான். அணியில் சேர்ந்த முதல் நாளில் இருந்து, வலைபயிற்சி தளத்தில் அவர் திறமையை நாங்கள் பார்த்து வருகிறோம்.

- Advertisement -

360 டிகிரியிலும் அனைத்து வகை ஷாட்களையும் ஆடக்கூடிய திறமை அவருக்கு உண்டு. இன்று எங்கள் அணி நெருக்கடியான நிலையில் இருந்தபோது, எந்தவிதமான பதட்டமுமின்றி சிறப்பாக விளையாடினார். இதே போல இனி வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கேஎல் ராகுல் கூறி முடித்தார்.

10 அணிகளில் 8 அணிகள் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடி வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் மீதமுள்ள இரண்டு அணிகளான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளனர்.