“அவர் இரு வீரர்களுக்கு சமம்” – இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளர்!

0
77
Arthur

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியுற்ற பிறகு இந்திய அணிக்கு தனிப்பட்ட முறையில் உண்டான நெருக்கடியை போலவே, தனிப்பட்ட வீரர்கள் சிலருக்கும் மிகப்பெரிய நெருக்கடி உருவானது. அப்படி ஒரு வீரர் ஹர்திக் பாண்டியா!

கடந்த டி20 உலக கோப்பையில் அவர் உடல் தகுதியோடு இல்லாதபோதும் மகேந்திர சிங் தோனி அணியில் ஒரு பேட்ஸ்மேன் ஆக தேர்வு செய்யப்பட்டது தோல்விக்கு பிறகு மிகப்பெரிய விவாதம் ஆக்கப்பட்டது. 5 பந்து வீச்சாளர்களுடன் மட்டும் சென்ற இந்திய அணி 151 என்ற சவாலான ரன்னை அடித்தும் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியுடன் தோற்றது. ஹர்திக் பாண்டியா பால் பந்துவீச முடியாதது மிகப்பெரிய ஒரு குறையாக இருந்தது.

- Advertisement -

இதையடுத்து அவர் அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணிக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்றும் தான் உடல் தகுதியில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி இந்திய அணியில் இருந்து விலகினார். அவர் தனிப்பட்ட பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அடுத்து துவங்கிய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தக்க வைக்காமல் வெளியில் விட்டது. குஜராத் அணிக்கு கேப்டனாக தேர்வான இவர், கேப்டனாக மட்டும் இல்லாமல், ஒரு பந்து வீச்சாளராக ஒரு பேட்ஸ்மேனாக களத்தில் ஒரு சிறந்த பீல்டராக நான்கு பரிணாமத்தில் அசத்தினார். இதன் விளைவு ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது. குறிப்பாக ஆர்டிக் பாண்டியாவின் பந்துவீச்சு மிக வேகமாக இருந்தது. அத்தோடு அவரது பேட்டிங் மிகவும் முதிர்ச்சி அடைந்து இருந்தது.

நேற்று முன்தினம் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் சராசரியாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் இக்கட்டான நேரத்தில் பேட்டிங்கில் வந்து 17 பந்துகளில் 33 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

- Advertisement -

இவரது இந்த சிறப்பான செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் இலங்கை போன்ற அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ள மிக்கி ஆர்தர், இவரை தென் ஆப்பிரிக்காவின் லெஜன்ட் ஆல்ரவுண்டர் ஆன ஜாக் காலிஸ் உடன் ஒப்பிட்டு மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

அவர் ஹர்திக் பாண்டியா பற்றி கூறும் பொழுது ” ஹர்திக் பாண்டியா ஒரு மிகச்சிறந்த வீரர். அவர் அணியில் இருந்தால் 12 வீரர்கள் அணியில் இருப்பதைப் போன்றது. தென்ஆப்பிரிக்க அணியில் ஜாக் காலிஸ் இருந்த போது நான் இருந்த காலத்தை இது நினைவு கூறுகிறது. உங்களின் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஐந்தாவது வேகப்பந்துவீச்சாளர் ஆகவும், பேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களில் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் விளையாட ஒரு பையன் உங்கள் இடத்தில் இருக்கிறார். இது ஒரு கூடுதல் வீரருடன் விளையாடுவதற்கு சமம்” என்று தெரிவித்தார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா முதிர்ச்சி அடைந்து இருந்ததை பார்த்தோம். அவர் தனது அணியை மிகச் சிறப்பாக நிர்வகித்தார். முக்கியமான கடினமான சூழ்நிலைகளில் சென்று அழுத்தத்தின் கீழ் அணிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தார். அவர் மிகச் சிறந்த வீரராக தற்போது மலர்ந்துள்ளார்” என்று கூறியிருக்கிறார்!