வரும் நாட்களில் இந்த தமிழக வீரர் விளையாடுவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் – ஷோயப் அக்தர்

0
2024
Shoaib Akhtar

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆரம்பத்தில் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும் அதன் பின்னர் தொடர்ச்சியாக ஐந்து போட்டியில் வெற்றி நடை போட்டது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூடிய விரைவில் தகுதியை அடைந்து விடும் என்று அனைவரும் நினைத்து நிலையில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. கேன் வில்லியம்சனின் சுமாரான பார்ம், மற்றும் அந்த அணியில் ஒரு சில வீரர்களுக்கு ஏற்பட்ட இஞ்சுரி என அந்த அணி தற்போது தொடர்ச்சியாக நான்கு தோல்வியை தழுவியுள்ளது.

- Advertisement -

11 போட்டிகளில் விளையாடி உள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணைந்து போட்டியில் வெற்றி கண்டு தற்பொழுது புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அந்த அணிக்கு இன்னும் மீதமிருக்கும் 3 போட்டிகளிலும் மூன்று வெற்றி தேவை.

மதிப்புமிக்க சொத்தாக அவர் உருவெடுப்பார் – ஷோயப் அக்தர்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 17.22 மற்றும் எக்கானமி 8.66 ஆக உள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் நடராஜன் குறித்து பெருமையாக தற்பொழுது பேசியிருக்கிறார். “தங்கராசு நடராஜன் நம்பிக்கைக்குரிய ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர். வரும் நாட்களில் அவர் இந்திய அணியில் மிகச் சிறப்பாக செயல்படுவார்.அவரை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். இந்திய அணிக்கு மதிப்புமிக்க சொத்தாக அவர் உருவெடுப்பார். மறுபக்கம் புவனேஷ் குமார் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் இவர்கள் இருவருக்கும் அவர்கள் இருவரும் தங்கள் திறமைகளை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர்,” என்று ஷோயப் அக்தர் இருவர் குறித்தும் பெருமையாக பேசியுள்ளார்.

தவறுகளை சரிசெய்ய வேண்டும் – கேப்டன் கேன் வில்லியம்சன்

ஆரம்பத்தில் எங்கள் அணி மிக சிறப்பாக செயல்பட்டாலும் தற்பொழுது அனைத்தும் சரியான நிலையில் செல்லவில்லை. பேட்டிங் மற்றும் பவுலிங் என எங்களது அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சில ஏரியாக்களில் நாங்கள் எங்களை இன்னும் சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குறுகிய நாட்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் எங்களது அணியில் உள்ள தவறுகளை சரி செய்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முயற்சிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.