பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கருப்பு நாள் அந்த தோல்வி.. உடற்பயிற்சியே செய்ய தெரியல – ஹசன் அலி ஓபன் பேட்டி

0
96
Pakistan

பாகிஸ்தான் கிரிக்கெட் தற்பொழுது பெரிய சீர்திருத்தத்தில் இருக்கிறது. புதிதாக இரண்டு பயிற்சியாளர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் வீரர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து அந்த அணியின் வீரர் ஹசன் அலி பேசி இருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மேத்யூ வேட் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஹசன் அலி தவறவிட்டார். அது பாகிஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்பொழுது அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து அவர் மிகவும் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஹசன் அலி கூறும் பொழுது ” நான் பாகிஸ்தான் தேசிய அணிக்கு வந்த பொழுது எனக்கு உடற்பயிற்சி பற்றி எதுவுமே தெரியாது. நாங்கள் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை 10, 15 என செய்வோம். ஆனால் முறையாக எதுவும் தெரியாது. பின்பு தேசிய அணியில் இணைந்த பிறகு கற்றுக்கொண்டேன். நான் என்னுடைய கால்களை பலமாக்க வேண்டி இருந்தது. மேலும் என்னுடைய தோள்கள் மற்றும் பின்புறம் மிகவும் பலவீனமாக இருந்தது.

ஆனால் இப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய விஷயங்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இனிமேல் உள்நாட்டு கிரிக்கெட்டில் செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இதனால்வீரர்களுக்கு எந்த குறைவும் ஏற்படாது. மேலும் அவர்கள் சர்வதேச கிரிக்கெட் தரத்துக்கு உயர்த்தப்படுவார்கள்.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். நான் அரையிறுதியில் கேட்ச் விட்டதால் தோல்வி அடைந்தோம். ஏன் எங்களால் அந்த கோட்டை கடக்க முடியவில்லை? எனவேஏதோ ஒரு தவறு இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தில் நாங்கள் நல்ல அணியாகவே இருந்தோம்.

இதையும் படிங்க : சூர்யாவை கம்பீர் கேப்டனா ஆக்குனதுக்கு காரணமே இதுதான்.. இது நிரந்தரம் அல்ல – ஸ்காட் ஸ்டைரிஷ் பேட்டி

இப்போது கூட எங்களிடம் ஒரு நல்ல அணி இருக்கவே செய்கிறது. கடந்த டி20 உலக கோப்பையில் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்து சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு கருப்பு நாள்.நான் பாகிஸ்தான் அணியை மோசமான அணி என்று சொல்லவில்லை. எல்லா அணிகளும் சமமாக இருக்கின்றன. நாம் எல்லாவற்றிலும் முன்னேற வேண்டியது இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -