இன்று பங்களாதேஷ் அணிக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் புனே மைதானத்தில், டாஸ் ஆரம்பத்திலிருந்து நல்ல விதமாக எல்லாம் நடந்தது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பங்களாதேஷின் புதிய கேப்டன் நஜிபுல் சாந்தோ முடிவுக்கு, துவக்கத்தில் ரிசல்ட்டை மிகச் சிறப்பாக பங்களாதேஷ் ஓபனிங் பேட்ஸ்மேன் தந்தார்கள்.
பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் அதிரடியாக மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள்.
மேலும் அவர்களுடைய பேட்டிங் மிக புத்திசாலித்தனமாக இருந்தது. அவர்கள் முதல் எட்டு ஓவரில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரையும் கவனத்தோடு எச்சரிக்கையாக விளையாடிய நகர்த்தி விட்டு, அடுத்து வந்தவர்களை தாக்கி, பதினைந்து ஓவர்களுக்கு உள்ளாக 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு கொண்டு வந்தார்கள்.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹசன் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்து 51 ரன்களுக்கு வெளியேறினார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஆனால் இதற்குப் பிறகு வந்த பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் இந்த துவக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்திய அணியின் திறமையான பந்துவீச்சு அவர்களை அதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் 256 ரன்கள் மட்டுமே எடுத்து, அதை 41.3 ஓவரில் இந்திய அணிக்கு கொடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள்.
தோல்விக்கு பின் பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜிபுல் சாந்தோ கூறும்பொழுது “இந்தியா எப்பொழுதும் ஒரு நல்ல பக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த வழியில் விளையாடுவதற்கான திறமையைக் கொண்டவர்கள். எங்களை விட எப்படியான சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு காட்டினார்கள். நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து மூன்று அணிகளும் சிறப்பாக இருக்கின்றன.
நாங்கள் எங்களுடைய ஆட்டத்தைச் சிறப்பாக விளையாடவில்லை. எதிர்காலத்தில் சரியாக செய்வோம் என்று நம்புகிறோம். ஷாகிப் காயத்தில் வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கிறேன்.
அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் நாங்கள் பேட் மூலம் சரியாக முடிக்கவில்லை. எங்கள் அணியின் ஓபனர்ஸ் தன்ஷித் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி இருந்தால், இந்த போட்டியில் கதை கொஞ்சம் வேற மாதிரி இருந்திருக்கும். அடுத்த ஆட்டத்தில் எங்கள் பேட்டர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!






