இந்திய கிரிக்கெட்

142 பந்துகள்.. பேட்டிங்கில் மாஸ் காட்டிய யுஸ்வேந்திர சாஹல்.. இந்திய அணியின் தேர்வு குழுவுக்கு மெசேஜ்

இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற டெஸ்ட் வடிவ கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியானா மற்றும் மத்திய பிரதேஷ் அணிகள் விளையாடி வருகிறது.

- Advertisement -

இதில் ஹரியானா அணியின் வீரரும், இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளருமான யுவேந்திரா சஹால் பேட்டிங்கிலும் தனது திறமையை காட்டி இருக்கும் நிலையில் இந்திய தேர்வுக்குழுவுக்கு சிறப்பான மெசேஜ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

ரஞ்சி டிராபி ஹரியானா மத்திய பிரதேச அணிகள் மோதல்

இந்தியாவின் ரஞ்சி டிராபி கிரிக்கெட் சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதன் சி பிரிவு ஆட்டத்தில் ஹரியானா மற்றும் மத்திய பிரதேஷ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 115 ஓவர்களுக்கு 308 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தது. இதில் மத்திய பிரதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹிமன்ஷு மந்த்ரி அபாரமாக விளையாடி 97 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய ஹரியானா அணி தொடக்க ஆட்டக்காரர் லக்ஷயா தளால் 105 ரன்கள், எச்.ரானா 90 மற்றும் தீறு சிங் 98 ரன்கள் என 339 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்த நிலையில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஹர்சல் பட்டேலுடன் இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் சஹால் களம் இறங்கினார். 142 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ஒரு நல்ல துடுப்பாட்டக்காரர் போன்று திறமையாக விளையாடி இரண்டு பவுண்டரிகளுடன் 27 ரன்கள் குவித்தார். இவரோடு களமிறங்கிய ஹர்ஷல் பட்டேல் 144 பந்துகளில் 72 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

பேட்ஸ்மேனாக மாறிய சஹால்

இதன் மூலமாக தன்னால் களமிறங்கி பேட்டிங்கும் செய்ய முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணிக்கு சூசகமாக மெசேஜ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். தற்போது ரஞ்சி டிராபி தொடரில் ஹரியானா அணிக்காக களம் இறங்கி தனது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்.சஹால் ஹர்சல் பட்டேல் இருவர் ஜோடி ஒன்பதாவது விக்கெட்டுக்கு 243 பந்துகளில் 67 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹரியானா அணி 9 விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் குவித்து இருக்கிறது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025 வீரர்கள் தக்கவைப்பு: கடைசி தேதி மற்றும் நேரம்.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. முழு விவரம்

இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஹரியானா ரஞ்சி டிராபி தொடரிலும் உத்தரப்பிரதேச அணிக்கு எதிராக களமிறங்கிய சஹால் 152 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஹரியானா அணி தனது முதல் இன்னிங்ஸில் 453 ரன்கள் குவித்தது.

- Advertisement -
Published by

Recent Posts