ஐபிஎல் 2025 வீரர்கள் தக்கவைப்பு: கடைசி தேதி மற்றும் நேரம்.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. முழு விவரம்

0
1514

இந்தியாவில் நடைபெறும் மிகப் பிரபலமான உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக இதுவரை 17 சீசன்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது. அடுத்த சீசன் வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் தக்க வைத்திருக்கும் வீரர்களின் பட்டியல் குறித்த தகவலை வெளியிடும் தொலைக்காட்சி உரிமம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

- Advertisement -

18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா

18வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்கிற உரிமையை ஐபிஎல் நிர்வாகம் வழங்கியுள்ளது. அதில் ஐந்து வீரர்கள் கேப்டடு பிளேயர்களாகவும் ஆறாவது வீரர் அன்கேப்டு பிளேயர் ஆகவும் இருக்கலாம் அல்லது நான்கு சர்வதேச வீரர்களாகவும் மற்றும் இரண்டு வீரர்கள் அன்கேப்டு வீரர்களாகவும் இருக்கலாம் என்றும் அறிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இறுதியாக முடிவு எடுத்து இருப்பார்கள் என்கிற நிலையில் அனைத்து அணிகளும் வருகிற 31-ஆம் தேதிக்குள் அது குறித்த தகவலை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வீரர்களின் விலையாக முதல் மற்றும் 4வது இடத்திற்கு தக்க வைக்கும் வீரர்களின் ஊதியம் 18 கோடி ரூபாயாகவும், இரண்டாவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கான ஊதியம் 14 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.

- Advertisement -

தக்கவைப்பு வீரர்கள் விபரங்களை வெளியிடும் தொலைக்காட்சி உரிமம்

மூன்றாவது இடத்தில் தக்கவைக்கும் வீரரின் ஊதிய தொகை 11 கோடி ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு அணிக்கு 120 கோடி ரூபாய் வீரர்களை வாங்குவதில் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒவ்வொரு ஐபிஎல் அணியும் வருகிற 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து வீரர்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவலை வெளியிட வேண்டும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி அன்கேப்டு வீரராக செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:2025 ஐபிஎல்.. இவர் கிடையாது.. மும்பை இந்தியன்ஸ் இந்த 5 வீரரையே தக்க வைக்கும் – ஹர்பஜன் சிங் கணிப்பு

மேலும் இந்த விபரங்களை அக்டோபர் 31ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் ஜியோ சினிமா நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -