ஐபிஎல் 2024

ஒரே மேட்ச் 10 விக்கெட்.. சிஎஸ்கே தட்டி தூக்கிய அதிசய வீரர்.. பலித்த அஸ்வின் வாக்கு.. யார் இந்த அன்ஷுல்.?

18வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஆக்ஷனில் எடுத்து வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் கம்போஜை ஏலத்தில் எடுத்துள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த அன்சூல் கம்போஜ்

ஐபிஎல் மெகா ஏலம் தற்போது துபாயில் நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டாவது நாள் தொடர்ந்து ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முந்தைய ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களை கிட்டத்தட்ட எடுத்துள்ள நிலையில் பல சிறப்பு வாய்ந்த வீரர்களையும் தற்போது ஏலத்தில் எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக அறிமுகமாகிய ஹரியானாவைச் சேர்ந்த அன்சூல் கம்போஜை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வாங்கியுள்ளது.மும்பை அணியை விட 17 மடங்கு அதிக தொகைக்கு தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி இருக்கிறது. அன்சூல் கம்போஜ் இதுவரை 18 முதல் தரப் போட்டிகளும் 15 லிஸ்ட் ஏ போட்டிகளும், ஒன்பது டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அதில் 47, 23 மற்றும் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணியில் அறிமுகமான கம்போஜ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்தப் பையனிடம் ஏதோ இருக்கிறது

2024-25ம் ஆண்டில் முதல் தர சீசனில் துலீப் ட்ராபியில் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அதற்கடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரஞ்சி டிராஃபியில் கேரளா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை கம்போஜ் படைத்தார். அதற்கு முன்னதாக 1956 மற்றும் 57 ஆம் ஆண்டில் வங்காளத்தின் பிரேமன்ஷு சட்டர்ஜி மற்றும் 1985-86ல் ராஜஸ்தானின் பிரதீப் சுந்தரம் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

இதையும் படிங்க:இந்திய அணியுடன் தோல்வி.. எங்க வீரர்களுக்கு இடையில் விரிசலா.? இதான் நடக்குது.. ஆஸி கேப்டன் கம்மின்ஸ் விளக்கம்

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக தனது யூ டுயூப் சேனலில் “அவர் சிறந்த தொகையை ஏலத்தில் பெறவில்லை என்றால் நான் ஆச்சரியமடைவேன். என்னுடைய வார்த்தைகளை குறித்து கொள்ளுங்கள். இந்தப் பையனிடம் ஏதோ இருக்கிறது” என்று கூறினார். அதற்கு தகுந்தவாரே கடந்த ஆண்டு 30 லட்சத்தில் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை அணியால் 3.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார். இது கடந்த ஆண்டை விட 17 மடங்கு அதிகமான தொகையாகும்.

- Advertisement -
Published by