ஐபிஎல் 2025

காம்போஜ் சர்பராஸ் வேணாம்.. அந்த பையன் தான் வேணும்.. திரும்ப வேலையை காட்டிய கம்பீர்.. என்ன நடந்தது?

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நிர்வாகத்தின் ரிசர்வ் வீரர்கள் தக்கவைப்பு தற்பொழுது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இது குறித்து இந்திய ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

தற்போது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் முகாமிட்டு இருக்கிறது. அனைத்து விதமான தயாரிப்புகளையும் முடித்துக் கொண்ட இந்திய அணி வருகின்ற இருபதாம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

காம்போஜ் – சர்பராஸ் அசத்தல்

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியில் அன்சூர் காம்போஜ் பந்துவீச்சில் சிக்கனமாகவும், சில விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் அரை சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது செயல்பாடு நல்ல முறையிலேயே இருந்தது.

சர்பராஸ் கான் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் எடுத்தார். மேலும் இந்திய அணியின் இன்டரா-ஸ்குவாட் பயிற்சி போட்டியில் வெறும் 76 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இறந்தபோதிலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ரிசர்வ் வீரர்களாக இவர்கள் இருவரையும் இந்திய அணி நிர்வாகம் வைத்துக் கொள்ளவில்லை.

- Advertisement -

கம்பீரின் செல்லப்பிள்ளை

இந்திய அணியின் பயிற்சி போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ரிசர்வ் வீரர்களாக இந்த இருவரும் தக்க வைக்கப்படுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீரின் செல்லப் பிள்ளையாக கருதப்படும் ஹர்ஷித் ராணா இந்திய அணியுடன் தக்கவைக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் மற்ற வீரர்கள் நாடு திரும்புகிறார்கள்.

இதையும் படிங்க : எனக்கு போன் பண்ணி ஒரு இந்திய வீரர் ஓய்வு பெற சொன்னார்.. அது பைத்தியக்காரத்தனமா இருக்கும் – கருண் நாயர் வெளியிட்ட தகவல்

இது முழுக்க முழுக்க கம்பீர் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு என இந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். சிறப்பான முறையில் இளம் வீரர்கள் இருவர் செயல்பட்டு இருந்த போதும், எதையும் செய்யாத ஹர்ஷித் ராணாவை ரிசர்வ் வீரராக தங்க வைத்தது ஏற்க முடியாது என்று கூறி வருகிறார்கள்.

- Advertisement -
Published by

Recent Posts