இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் சிவம் துபே காயமடைந்ததற்கு ஹர்சித் ராணாவை கொண்டு வந்தது பைத்தியக்காரத்தனமான முடிவு என கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் தற்பொழுது கைப்பற்றி இருக்கிறது. வெற்றி பெறுகின்ற வாய்ப்பில் இருந்த இங்கிலாந்து அணி இந்தியா ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை பெற்ற காரணத்தினால் தோற்றது என்று கூறலாம்.
இந்திய அணியின் மிதவேக பந்து வைத்து ஆல் ரவுண்டராக சிவம் துபே இருந்து வருகிறார். நேற்று இந்திய அணியில் இவருக்கு தலையில் அடிபட்ட காரணத்தினால் மாற்று வீரர் கொண்டு வர வேண்டி இருந்தது. இந்த நிலையில் இவருக்கு சரியான மாற்று வீரராக இந்திய அணியில் மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரமன்தீப் சிங் இருந்தார்.
இப்படி சரியான மாற்றுவீரர் இருந்த பொழுதிலும் முழுமையான வேகப்பந்துவீச்சாளரான ஹர்சித் ராணா மாற்று வீரராக வந்தது பெரிய விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இங்கிலாந்து அணியின் சார்பில் கேப்டன் ஜோஸ் பட்லர் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நேற்று அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசி இருக்கும் அலைஸ்டர் குக் கூறும் பொழுது ” ஐபிஎல் தொடரில் இதுவரையில் ஒரே ஒரு ஓவர் மட்டும் வீசி இருக்கும் பேட்டிங் ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு பதிலாக, ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளரை மாற்று வீரராக கொண்டு வருவது என்பது எந்தவித அர்த்தமும் இல்லாதது”
இதையும் படிங்க : ஷிவம் துபேவுக்கு பதில் ஹர்ஷித் ராணா.. முடிவெடுத்தது இவங்கதான்.. நடந்தது என்ன? – மோர்னே மோர்கல் பேட்டி
“நீங்கள் இதைச் செய்ய அனுமதிப்பது முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது. ஆனாலும் இந்த போட்டியில் அறிமுகம் ஆகி சிறப்பாக செயல்பட்ட ஹர்ஷித் ராணாவுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். அவரை விளையாட அனுமதித்திருக்கக் கூடாது. இது கேப்டனுக்கு இன்னொரு நல்ல வாய்ப்பை கொடுக்கிறது” என்று கூறி இருக்கிறார்.