நான் வீசிய 20ஆவது ஓவரில் ஜடேஜா 37 ரன்கள் விளாச இதுதான் காரணம் – ஹர்ஷல் பட்டேல் பேட்டி

0
1500
Harshal Patel about Jadeja 37 Run Over

2021 ஐ.பி.எல் தொடரில் ஹர்ஷல் பட்டேலுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இந்திய அணி வரை முன்னேறி அசத்தினார். முதல் போட்டியிலேயே ஹாட்ரிக்குடன் 5 விக்கெட் ஹால் சாதனையை நிகழ்த்தினார். தொடரின் முடிவில் மொத்தமாக 32 விக்கெட்டுகள் கைபற்றி பர்ப்பில் கேப்பையும் அதிக மதிப்பு மிக்க வீரர் விருதையும் வென்றார். ஒரு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்திய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அனைத்து நாட்டு வீரர்களில் அச்சாதனையை பிராவோவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹர்ஷல் பட்டேலின் கனவு ஐ.பி.எல் தொடரில் மோசமான ஒரு நிகழ்வும் நடந்தது. சென்னை – பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியின் 20 ஓவர் தான் அது. சி.எஸ்.கே ஆல்ரவுண்டர் ஜடேஜா ஒரே ஓவரில் மொத்த ஆர்.சி.பி அணியின் உழைப்பையும் தகர்த்தெறிந்தார்.

- Advertisement -

அதிரடியாக பேட்டிங் செய்ய ஆரம்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிடில் ஓவர்களில் ஆர்.சி.யின் பந்துவீச்சை சமாளிக்கத் திணறி தேவையான ரன்களைச் சேர்க்கத் தவறியது. 19 ஓவர் முடிவில் 154/4 என்ற ஸ்கோரில் இருந்தது. பெங்களூர் அணியின் பலமான பேட்டிங்கை சமாளிக்க நிச்சயம் இது பத்தாது என்று ரசிகர்கள் கருதினர்.

ஹர்ஷல் பட்டேல் வீசிய 20வது ஓவரில் ஜடேஜா 5 சிக்ஸர்கள் & 1 பவுண்டரி உட்பட மொத்தம் 37 ரன்கள் விளாசி சென்னை அணியை இமாலய இலக்கிற்கு அழைத்துச் சென்றார். ஒரே அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனை ஹர்ஷல் பட்டேலின் பெயருக்கு பின்னால் இணைந்தது. இதற்கு முன் பிரசாந்த் பரமேஸ்வரன் 2011இல் கிறிஸ் கெயிலிடம் 37 ரன்களுக்குச் சென்றார்.

37 ரன் ஓவர் குறித்து ஹர்ஷல் பட்டேல் கூறியது

சமீப நேர்காணல் ஒன்றில் இச்சம்பவம் குறித்து அவர், “ எதையும் மிக சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை தான் நான் 11 வருட விளையாட்டு வாழ்க்கையில் கற்றுக்கொண்டேன். அவ்வாறு இல்லையெனில் கடுமையான சூழலில் தாக்குப்பிடித்திருக்க இயலாது. அன்று ஜடேஜாவின் தினம். என்னால் ஒரு யார்க்கார் கூட வீச முடியவில்லை. ”

- Advertisement -

2021 ஐ.பி.எல் தொடர் முழுதும் டெத் ஓவர்களில் ஸ்லோ யார்க்கர் வீசி விக்கெட்டுகளை அள்ளிய ஹர்ஷல் பட்டேலால் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அதை செய்யத் தவறினார். ஜடேஜா அன்று 37 ரன்கள் விளாச இதுவே முக்கியக் காரணம். அப்போட்டியில் என்னதான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும் அவருக்குத் திருப்பதியில்லாத நாளாகத் தான் முடிந்தது.