என்னுடைய சிறந்த கேப்டன் இவர்தான் ; நான் ஐ.பி.எலில் இந்த அணிக்கு விளையாட விரும்புகிறேன் – ஹர்ஷல் பட்டேல்

0
1653
Harshal Patel

டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் 2011 முதல் ஹரியான அணிக்காக விளையாடி வருபவர் வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷால் பட்டேல். ஐபிஎல் தொடரில் 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் பெங்களூரு அணியில் விளையாடிய அவர், 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை டெல்லி அணியில் விளையாடினார்.

3 வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு மீண்டும் பெங்களூரு அணியில் ஹர்ஷால் களமிறங்கி விளையாடினார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 32 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்ஷால் பர்பில் தொப்பியை வென்றார். ஒரு ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த டுவைன் பிராவோ ( 32 விக்கெட்டுகளை கைப்பற்றி )தான் இருந்தார்.

கடந்த ஆண்டு ஹர்ஷால் பட்டேல் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பிராவோவின் சாதனையை சமன் செய்து ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும், இந்திய பந்துவீச்சாளர்கள் மத்தியிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் ஹர்ஷால் பட்டேல் தனி சாதனை படைத்தார்.

சென்னை அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ள ஹர்ஷால்

சமீபத்தில் பேசியுள்ள ஹர்ஷால் பட்டேல், “கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை எம் எஸ் தோனி தான் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனக்கு மிகவும் பிடித்த அணி என்றும் அதில் தான் விளையாட மிக ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் மகேந்திர சிங் தோனி தான் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் மிகச் சிறந்த கேப்டன் என்றும், அவரது தலைமையின் கீழ் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அதைவிட வேறு சந்தோசம் தனக்கு இல்லை”, என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மிக சிறப்பாக பந்து வீசிய அவர் நிச்சயமாக இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்ஷால் பட்டேலின் ஆசைப்படி அவர் சென்னை அணி நிர்வாகம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதை அடுத்த மாதம் வரையில் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.