சிராஜ் மட்டுமே செய்திருந்த சாதனையை சமன் செய்துள்ள சக பெங்களூர் பவுலர் ஹர்ஷல் பட்டேல்

0
66
Harshal Patel and Mohammad Siraj

ஐ.பி.எலின் ஆறாவது ஆட்டம் இன்று நவி மும்பையின் டி.ஒய் பாட்டில் மைதானத்தில், பாஃப் டூ பிளிசிஸ் தலைமையேற்று இருக்கும் பெங்களூர் அணிக்கும், ஸ்ரேயாஷ் தலைமையேற்று இருக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே நடந்து வருகிறது.

பெங்களூர் அணி தனது முதல் ஆட்டத்தில் டாஸில் தோற்று 205 ரன்கள் அடித்தபோதும், பனிப்பொழிவின் பாதிப்பால் பஞ்சாப்பிடம் தோற்றது. கொல்கத்தா தனது முதல் ஆட்டத்தில் டாஸை வென்று சென்னைக்கு எதிராக ஆட்டத்தையும் வென்றது.

- Advertisement -

இந்த நிலையில் ஆட்டத்தின் முடிவில் முக்கியப் பங்கு வகிக்கும் டாஸை வென்று பெங்களூர் அணி கேப்டன் பாஃப் தனது அணி பீல்டிங் செய்யும் என அறிவித்தார். முதலில் பேட் செய்ய இறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே சீரான இடைவெளியியில் தலைவலியைத் தந்தது பெங்களூர் அணி!

ஆட்டத்தின் 4, 5, 6, 7 ஓவர்களில் வரிசையாய் வெங்கடேஷ், ரகானே, ராணா, கேப்டன் ஸ்ரேயாஷ் என முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது பெங்களூர் அணி. இதலிருந்து கொல்கத்தா அணியை மீள விடாமல் பந்துவீச வந்த ஹர்சல் பார்த்துக்கொண்டார்.

ஆட்டத்தின் 12, 14 வது ஓவரை வீசிய ஹர்சல், கொல்கத்தா அணியின் கடைசி நம்பிக்கையான பில்லிங்-ரஸல் ஜோடியை பெவிலியன் அனுப்பி வைத்ததோடு, அந்த இரண்டு ஓவர்களையும் மெய்டனாகவும் வீசினார். இரண்டு மெய்டன் ஓவர்களை ஐ.பி.எல்-ல் ஒரே ஆட்டத்தில் சிராஜ்க்கு அடுத்து வீசியவர் ஹர்சல்தான்!

- Advertisement -