ஐசிசி 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிக்கு ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதிலிருந்து சிறந்த பிளேயிங் லெவனை புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தேர்ந்தெடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு உலகக்கோப்பை தொடர்க்கும் பிறகும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து பிளேயிங் லெவனை ஒவ்வொருவரும் உருவாக்குவது வழக்கம். மேலும் இதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வழக்கமாகவே செய்து கொண்டு வருகிறது. அவர்கள் ஒவ்வொரு உலகக்கோப்பை முடிவிலும் சிறந்த பிளையிங் லெவனை வெளியிடுவார்கள்.
இந்த வகையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வெளியிட்ட பிளேயிங் லெவனின் கேப்டனாக உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. மேலும் இந்த அணியில் நான்காவது இடத்தில் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த நிலையில் இருக்கும் சூரியகுமார் யாதவ் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து ஹர்ஷா போக்லே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வெளியிட்ட பிளேயிங் லெவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதில் மிக முக்கியமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார்.
அவர் தேர்ந்தெடுத்திருக்கும் பிளேயிங் லெவலில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ரகமனுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூரியகுமார் குமார் யாதவ், டேவிட் மில்லர், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணி எதிரா ஆடும் யுவராஜ் ரெய்னா.. இந்திய டீமின் முழு வீரர்கள் லிஸ்ட்.. உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் 2024
ஆஸ்திரேலியா கிரிக்கெட் தம்முடைய பிளேயிங் லெவனில் சேர்க்காத இந்திய வீரர்கள் சூரியகுமார் யாதவ் மற்றும் குல்தீப் யாதவுடன் சேர்த்து மொத்தம் ஐந்து இந்திய வீரர்களை தன்னுடைய பிளேயிங் லெவனில் வைத்திருக்கிறார். அதே சமயத்தில் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்ற பொழுதும், அவர் தொடர் முழுக்க மற்ற போட்டிகளில் சரியாக விளையாடாததால், அவரை நேர்மையாகத் தேர்வு செய்யாமல் தவிர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!