ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் ஷர்மா அறிவுப்பூர்வமாக ஆடியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் பாராட்டியுள்ளார். பெரிய ஆஸ்திரேலிய மைதானங்களில் டீப் ஃபீல்டர்களைத் தாண்டி அடிக்க முயற்சிக்காமல் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். பிரிஸ்பேனில் நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இருப்பினும், இந்தியா 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி முடிவின்றி நின்றது. இது குறித்து பேசிய பார்த்தீவ் பட்டேல், “அபிஷேக் சிக்ஸர் அடிப்பதில் பிரபலம். இந்தத் தொடரில் கண்ட ஒரு விஷயம், ஒவ்வொரு பந்தையும் கண்மூடித்தனமாக ஸ்விங் செய்ய முயற்சிக்கவில்லை என்பதுதான்.”
முதிர்ச்சி தெரிகிறது:
“ஃபீல்டிங் ஏற்ற வகையில் எப்படி ஆட வேண்டும் என்கிற முதிர்ச்சி தெரிந்தது. இந்தியாவில் மைதானங்கள் பொதுவாகச் சிறியவை. அதனால் டீப் ஸ்கொயர் லெக் ஃபீல்டர் இருந்தாலும் தாண்டி சிக்ஸர் அடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால் இங்கு பவுண்டரி 75 அல்லது 80 மீட்டர் இருந்தால் அவ்வளவு எளிதாகத் தாண்டாது.”
“அப்போது பாக்கெட்களில் அடிக்க வேண்டும். ஃபீல்டர்கள் இல்லாத இடங்களில் ஷாட் அடிக்க வேண்டும். மெல்போர்னிலும் இன்றும் அபிஷேக் ஷர்மாவின் இன்னிங்ஸில் அதைப் பார்த்தோம். ரூம் உருவாக்கி, ஃபீல்டர்கள் இல்லாத இடங்களில் அடித்தார்.” என்று பார்த்தீவ் பட்டேல் கூறினார். அபிஷேக் ஷர்மா தொடரின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். ஐந்து இன்னிங்ஸ்களில் 163 ரன்கள் எடுத்தார். 161.38 ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.
ஏமாற்றம் வரலாம்:
அதே விவாதத்தில், அபிஷேக் ஷர்மா தொடர்ந்து ஆக்ரோஷமாகவே ஆடுவார். இருப்பினும் சில சமயம் அவரது ஆட்டமிழப்புகள் ஏமாற்றம் அளிக்கலாம் என்று பார்த்திவ் படேல் கருத்து தெரிவித்தார். “இப்படித்தான் ஆடுவார். இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸரும் வந்த பிறகு இன்னொரு சிக்ஸர் அடிக்க வேண்டிய அவசியமா என்ற ஏமாற்றம் சில சமயம் வரும். ஆனால் அவர் இப்படித்தான் ஆடுவார் என்று நினைக்கிறேன்.”
இதையும் படிங்க: இந்தியா கிட்ட இப்ப நாங்க தோத்துட்டோம்.. ஆனா முழுசா வரப்ப வேற மாதிரி இருப்போம் – மிட்சல் மார்ஸ் பேச்சு
“அவர் 12-13 ஓவர்கள் ஆடினால் இந்தியா பெரும்பாலும் போட்டியை வெல்லும். ஏனெனில் அந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுகிறார். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இதே ஸ்டைலில்தான் 1,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதனால் உயர்ந்த ரிஸ்க், உயர்ந்த ரிவார்ட் கிரிக்கெட்டுடன் சீரான தன்மையையும் அபிஷேக்கின் பேட்டிங்கில் பார்க்கிறோம்” என்று பார்த்திவ் கூறினார். அபிஷேக் ஷர்மா 28 டி20 இன்னிங்ஸ்களில் 1012 ரன்களை 189.51 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார்.






