நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஒரு வெற்றி மந்திரத்தை தவற விட்டு வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வீரரை மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விளையாட வைத்தால் சிஎஸ்கே அணி மீண்டும் தங்களுடைய வெற்றி பாதைக்கு திரும்பி விடும் என புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறியிருக்கிறார்.
நேற்று சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறும் பத்து ஓவர்களில் பந்துவீச்சில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணிக்கு தொடர்ந்து ஐந்தாவது தோல்வியாகவும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியாகவும் அமைந்தது. இதுவரை சிஎஸ்கே வரலாற்றில் இப்படி நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணி தவறவிடும் வெற்றி மந்திரம்
இந்த நிலையில் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சிஎஸ்கே வெற்றிகரமாக இருந்த காலகட்டத்தில் விக்கெட்டுகள் வேகமாக விழும் பொழுது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்து வந்ததாகவும், தற்பொழுது அந்த விஷயத்திற்கு சரியான ஆள் இருந்தும் அதை செய்யவில்லை எனவும் சில விளக்கங்களை கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “சிஎஸ்கே அணி மிகவும் வெற்றிகரமான அணியாக இருந்த காலகட்டத்தில், வேகமாக விக்கெட்டுகளை இழந்து அவர்கள் நெருக்கடியில் இருக்கும் பொழுது இன்னிங்சை சரி செய்வதற்காக மட்டுமே ஒரு வீரரை பயன்படுத்தினார்கள். அந்த வீரர்தான் பத்ரிநாத். அவர் ஏதோ ஒரு போட்டிகளில்தான் முன்னே அனுப்பப்படுவார். இதுதான் சென்னை அணியின் பலமாக அப்போது இருந்தது”
ஜடேஜாவுக்கு இதை செய்ய வேண்டும்
“இப்போது உள்ள சிஎஸ்கே அணியில் இந்த பலம் கிடையாது. எனவே இதன் காரணமாகத்தான் இப்பொழுது பவர் பிளேவில் சிஎஸ்கே மிகவும் தற்காப்பான முறையில் விளையாடுகிறார்கள். போட்டியையும் அவர்கள் அங்கேயே இழந்து விடுகிறார்கள். ஏலத்தின் போது அவர்கள் ஒரு சிறந்த இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை எடுக்காதது இந்த தோல்விகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது”
இதையும் படிங்க : 2 ஃபாரின் பிளேயர்ஸ் கூட சேர்ந்து திட்டம் போட்டன்.. சிஎஸ்கேவ சுருட்டுனது இப்படிதான் – ரகானே விளக்கம்
“நான் ஜடேஜாவை பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் களமிறக்க வேண்டும் என்று ஏன் கூறுகிறேன் என்றால், அவரால் அந்த இடத்தில் உறுதித் தன்மையை கொடுக்க முடியும். இந்த சீசனில் அந்த இடத்தில் முயற்சிக்கப்பட்ட மற்ற பேட்ஸ்மேன்களை விட ஜடேஜா சிறந்தவர். அதிரடியாக ஆட வேண்டிய சூழ்நிலை இல்லாத பொழுது அந்த இடத்திற்கு ஜடேஜா சரியாக இருப்பார். சிஎஸ்கே அணியின் பிரச்சனைகளை தீர்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.






