இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை தான் போட்டியாக கருதவில்லை எனவும், ஒருபோதும் அப்படி நினைத்ததே கிடையாது எனவும் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஹாரி புரூக் கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் 147 ரன்கள் எடுக்க, ஹாரி குரூக் 99 ரன்கள் எடுத்திருந்தார். இருவருமே இந்த தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறார்கள்.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்மித் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் விராட் கோலி ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஹாரி புரூக், சுப்மன் கில், பென் டக்கெட் மற்றும் ஜெய்ஸ்வால் போன்றவர்கள் போட்டியில் இருக்கிறார்கள். சரியான நிலையில் தான் கில் தனக்கு போட்டி கிடையாது என புரூக் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஹாரி புரூக் கூறும் பொழுது “கில் எனக்கு போட்டியா? அடக்கடவுளே அப்படி நான் எப்பொழுதுமே நினைத்தது கிடையாது! கில் வெளிப்படையாக ஒரு சிறந்த வீரர். அவருக்கு எதிராக நான் அதிக முறை விளையாடுவேன் என்று நினைக்கிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதற்கு தேவையான திறமையை அவரும் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் போட்டி என்று நான் நினைத்தது கிடையாது”
இதையும் படிங்க : இங்கிலாந்துல உங்கள.. இந்த தமிழ்நாட்டு பையன்தான் காப்பாற்றுவார்.. தப்பு கணக்கு போடாதிங்க – இர்பான் பதான் பேச்சு
“பும்ரா தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். இப்படியானவரின் சிறந்த பந்துகளுக்கு மதிப்பு கொடுத்து, கொஞ்சம் சாதாரண பந்துகள் கிடைக்கும் பொழுது அடித்து விளையாட வேண்டும். நாங்கள் அவருக்கு எதிராக முதல் டெஸ்டில் இதைத்தான் செய்தோம். மேலும் எங்களுக்கு எதிராக யார் பந்து வீசினாலும் அவர் யார் என்றெல்லாம் நாங்கள் பார்க்க மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.