ODI கிரிக்கெட்டிலும் பாஸ்பால்தான் ஆடுவோம்.. ஆஸிக்கு அந்த செக் இருக்கு – இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் பேட்டி

0
54
Brook

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாஸ்பால் முறையில் அதிரடியாக விளையாடுவோம் என இங்கிலாந்து புதிய கேப்டன் ஹாரி புரூக் தெரிவித்திருக்கிறார்

இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதன் காரணமாக இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி குரூப் புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டிலும் பாஸ்பால் முறை

இது குறித்து புதிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி குரூக் கூறும்பொழுது “எல்லாம் ஒரு கட்டத்தில் எங்களுக்கு ஒருங்கிணைய போகிறது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எங்களுடைய விளையாட்டைவிளையாட விரும்பினாலும் கூட நாங்கள் பாஸ்பால் அணுகுமுறையை கொண்டிருக்க விரும்புகிறோம். இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கு புதிய பயிற்சியாளராக மெக்கலம் வருவதற்கு முன்பாகவே அவரது கொள்கையை நாங்கள் கொண்டிருக்க போகிறோம்”

“நாம் விளையாடும் விளையாட்டு பொழுதுபோக்காக இருக்க வேண்டும். மக்களை மகிழ்விக்க வேண்டும். நாம் ஆட்டத்தை கையில் எடுத்து, அவர்களது பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து, ஆட்டத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்”

- Advertisement -

ஜோப்ரா ஆர்ச்சருக்கு பிரச்சனை இல்லை

மேலும் பேசிய ஹாரி புரூக் “எனக்கு ஜோப்ரா ஆர்ச்சர் பற்றி எந்த அறிவுறுத்தல்களும் கொடுக்கப்படவில்லை. அவர் தன்னுடைய முழு பத்து ஓவர்களையும் பேச அனுமதிக்கப்படுவார் என்று நினைக்கிறேன். அவரை சாதாரணமாக பயன்படுத்தலாம்”

“நான் ஒவ்வொரு போட்டியுமே சதம் எடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அது நடக்காது இல்லையா? தொழில்முறையான விளையாட்டு அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. நான் வெளியே சென்று என்னால் முடிந்தவரை முயற்சி செய்து என்னுடைய உள்ளுணர்வின்படி விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : என்னை யாரும் திட்டாதிங்க.. கில்லுக்கு இடமில்ல.. என் இந்திய டெஸ்ட் பிளேயிங் XI இதுதான் – ஸ்ரீகாந்த் தேர்வு

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 5 மணி அளவில் தொடங்குகிறது.

- Advertisement -