விராட் கோலி தோனியின் ஸ்பெஷல் சாதனை.. ஹாரி புரூக் முறியடிப்பு.. இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டி

0
65
Virat

தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் விராட் கோலி மற்றும் தோனி சாதனைகளை உடைத்து இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் புது சாதனை படைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற நான்கு போட்டியில் இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகளை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. இன்று வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்மித்

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஸ் விளையாடாத காரணத்தினால் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து டாஸ் வென்ற ஸ்மித் முதலில் ஆஸ்திரேலிய அணி பந்து வீசும் என அறிவித்தார்.

முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 91 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பென் டக்கெட் உடன் இணைந்து விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் வழக்கம் அதிரடியாக 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்தத் தொடரில் இவருக்கு இது மூன்றாவது 50 பிளஸ் ஸ்கோர் ஆகும்.

விராட் கோலி தோனி சாதனை முறியடிப்பு

5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஹாரி புரூக் ஒட்டுமொத்தமாக 312 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருடைய ரன் ஆவரேஜ் 78 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 128 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியாவை கழட்டி விடுங்க.. இத செய்யுங்க போதும் – அஜய் ஜடேஜா அட்வைஸ்

இதற்கு முன்னால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக விராட் கோலி ஒட்டுமொத்தமாக 310 ரன்கள் எடுத்திருந்த சாதனையை இங்கிலாந்து கேப்டனாக ஹரி புரூக் முறியடித்தார். மேலும் 2009 ஆம் ஆண்டு கேப்டன் மகேந்திர சிங் தோனி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 284 ரன்கள் எடுத்திருந்ததையும் முறியடித்தார்.

- Advertisement -