ஆஸியின் ஸ்மித் பிளான்.. கம்பீர் அகர்கர் பதிலடி திட்டம்.. ஹர்திக் பாண்டியா வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ.. என்ன நடக்கிறது?

0
185
Hardik

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே இரண்டு அணிகளும் தொடரை வெல்வதற்கான ரகசிய திட்டங்களில் ஈடுபட்டு தொடருக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தற்பொழுது ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்மித்தை வைத்து ஒரு சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு கொண்டு வருகிறது. அதேபோல இந்திய தரப்பில் ஏதாவது சிறப்பு திட்டம் இருக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஒரு வீடியோவை வெளியிட்டு பல யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸியின் ஸ்மித் திட்டம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதும் ஆஸி கிரிக்கெட் ஸ்மித்தை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பியது. இதன் காரணமாக வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களான கேமரூன் கிரீன் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரையும் பிளேயிங் லெவலில் அவர்களால் வைத்துக் கொள்ள முடிந்தது. இதனால் ஆசியா தவிர்த்து மற்ற நாடுகளில் அவர்கள் சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை கொண்டுவர முடிந்தது.

குறிப்பாக பிளேயிங் லெவனில் இடம்பெறும் மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போட்டிக்குள் சரியான ஓய்வு கொடுத்து அவர்களை நிர்வகிக்க முடியும். மேலும் தேவைப்படும்போது அவர்களை புத்துணர்ச்சியோடு கொண்டு வந்து தாக்குதலை கொடுக்க முடியும். இதன் மூலமாக ஆசியாவுக்கு வெளியே ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்ச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா வெளியிட்ட வீடியோ

இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியா நேற்று சிவப்பு பந்தில் பந்து வீசி பயிற்சி பெற்று வருவது போலான வீடியோவை வெளியிட்டு யூகங்களை கிளப்பி இருக்கிறார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டெஸ்ட் அணிக்கு ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சில கிரிக்கெட் வல்லுனர்களும் கூறி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 21ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் முதல் முறை.. ஆப்கான் நியூசிலாந்து டெஸ்ட் பரிதாபம்.. தவறு யார் மீது?

இந்திய தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இருவரும் இதில் ரகசியமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், ஹர்திக் பாண்டியாவை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்வதற்காகவே அவருக்கு மற்றவர்களை விட அதிக ஓய்வு கொடுத்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் பதிலடி திட்டம் அருமையானதாக அமையும்!

- Advertisement -