நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு சாதனைகளை தாண்டி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இந்திய டி20 அணிக்கு கேப்டன் பொறுப்பு கிடைக்காவிட்டாலும் கூட ஹர்திக் பாண்டியா அணி உடன் இணைந்து சூரிய குமாருக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நேற்றைய போட்டியில் பந்துவீச்சு ஃபீல்டிங் பேட்டிங் என மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
கம்பீரின் புதிய கணக்கு
இந்திய பேட்டிங் வரிசையில் லோயர் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் இடத்தில் மொத்தமாக மூன்று ஆல்ரவுண்டர்களை வைப்பது என்பது கம்பீரின் திட்டமாக இருக்கிறது. மூவருமே பவர் ஹிட்டர்களாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதன் காரணமாக நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் என மூன்று ஆல் ரவுண்டர் பவர் ஹிட்டர்களை வைத்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து 24 பந்தில் அதிரடியாக 52 ரன்கள் குவித்தார்கள். மேலும் இருவரும் சேர்ந்து ஆறு ஓவர்கள் பந்து வீசவும் செய்திருந்தார்கள். நேற்று இந்திய அணிகள் மொத்தம் எட்டு பேர் பந்து வீசுவதற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ரியான் பராக் பந்து வீசவில்லை.
ஹர்திக் பாண்டியா சாதனை
நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா வெறும் 16 பந்துகளை மட்டுமே சந்தித்து ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 243 ஸ்ட்ரைக்ரேட்டில் 39 ரன்கள் அடித்தார். மேலும் கடைசியாக சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்ததில் தோனி மற்றும் விராட் கோலி சாதனைகளை ஹர்திக் பாண்டியா முறியடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியா ஆஸ்திரேலியா விட.. இங்கிலாந்து கிரிக்கெட் இந்த விஷயத்துல பெஸ்ட்டா இருக்கு – பாக் டெஸ்ட் கேப்டன் பேட்டி
டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்த இந்தியர்கள் :
5 – ஹர்திக் பாண்டியா
4 – விராட் கோஹ்லி
3 – தோனி
3 – ரிஷப் பண்ட்
1 – சிவம் துபே
1 – ஸ்ரேயாஸ் ஐயர்
1 – யுவராஜ் சிங்
1-டி கார்த்திக்
1 – வாஷிங்டன் சுந்தர்
1 – இர்ஃபான் பதான்
1- சூரியகுமார்






