இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே முதல் டி20 போட்டி வருகிற 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமான பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்காததற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்டு கூறியிருக்கிறார்.
டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக பதவி வகித்த ஹர்திக் பாண்டியாதான் அடுத்த இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் அகர்கர் மற்றும் கௌதம் கம்பீர் தலைமையிலான குழு, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் யாதவை புதிய டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. துணை கேப்டன் பதவிக்கு கூட பாண்டியாவை பரிசீலிக்காமல் கில்லை துணை கேப்டனாக நியமித்தது.
இது இந்திய முன்னாள் வீரர்கள் இடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர், பாண்டியாவின் பிட்னஸ் பிரச்சனை காரணமாகத்தான் நாங்கள் சூரியகுமார் யாதவை எதிர்கால கேப்டனாக நியமித்தோம் என்று அதற்கான விளக்கத்தை கூறியிருந்தார். இந்த கருத்து ஒரு தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், ஒரு தரப்பினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரசல் அர்னால்ட், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு அனைவரின் மரியாதையையும் பெற தவறியதே பாண்டியா இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்படாததற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். இது கௌதம் கம்பீர் குழுவை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்க அதிகவாய்ப்பு இருந்ததாகவும் கூறுகிறார்.
இது பற்றிய அவர் கூறும்போது “ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருமே விதிவிலக்கான வீரர்கள். அவர்கள் அணிக்கு வெவ்வேறு புதிய விஷயங்களை கொண்டு வருகிறார்கள். சூரியகுமார் யாதவ் விளையாடும் விதம் அவரை சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவராக மாற்றி இருக்கிறது. அவர் வேறு யாராலும் அவ்வளவு எளிதில் அணுக முடியாத விதத்தில் கிரிக்கெட்டை அணுகுகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை என்னால் எண்ண முடிகிறது.
இதையும் படிங்க:இலங்கை இந்திய தொடர்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல்லை.. எந்த சேனல்.?.. போனில் எங்கு பார்க்கலாம்.. முழு விபரம்
அவர் டிரெஸ்ஸிங் ரூமில் அனைவரின் மரியாதையும் பெற முடியாததே முக்கிய காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது பிசிசிஐயின் கவனத்தை வேறு கோணத்தில் செலுத்த தூண்டி இருக்கலாம். அனைவரையும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க வைத்து உங்கள் பக்கத்தில் இழுத்திருக்க முடியும். இது பாண்டியாவால் முடியாது என்று நான் கூறவில்லை. ஆனால் குறிப்பிட தருணத்தில் இது அவருக்கு நிகழாமல் போய் இருக்கலாம். சூரியகுமார் தன்னை நிரூபிக்க ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு இது” என்று கூறியிருக்கிறார்.






