இந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் அடுத்த ஆண்டு எனது அணியில் விளையாட ஆசைப்படுகிறேன் – ஹர்திக் பாண்டியா விருப்பம்

0
4603
Hardik Pandya Gujarat Titans

2015ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத வீரராக விளையாடி வந்தார். அதன் பின்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் ரைட்டன்ஸ் அணியின் கேப்டனாக தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்று குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தற்பொழுது நடந்து முடிந்துள்ளது.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 177 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கீரோன் பொல்லர்டு தன்னுடைய அணியில் விளையாட வேண்டும்

2015ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்து மும்பை அணியை வெற்றி பெற வைப்பார். அந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அதை சுட்டிக்காட்டியுள்ள அவர், “அந்த போட்டியை என்னால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கடினமான சூழ்நிலையிலிருந்து கடைசி நேரத்தில் 4 பந்துகளை மீதம் வைத்து எங்களது அணி வெற்றி பெறும். அந்தப் போட்டி என் மனதிற்கு நெருக்கமான போட்டி. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து நான்கு முறை பட்டம் வென்றிருக்கிறேன். அதையும் என்னால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான கீரோன் பொல்லார்ட் அடுத்த வருடம் குஜராத் அணியில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இது கனவிற்கும் அப்பாற்பட்டது. இது நடை பெறவில்லை என்றாலும் இது தன்னுடைய ஆசை என்று புன்னகையுடன் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இன்று நடைபெற இருக்கும் ஆட்டத்தில் அவர் நன்றாக விளையாட வேண்டும் என்றும் கூறினார்.

கேப்டனான முதல் வருடமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 11 போட்டிகளில் விளையாடி தற்பொழுது எட்டில் வெற்றிகண்டு 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஏறக்குறைய அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது என்றே கூறலாம். ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.