6,6,6,6,6,4.. ஒரே ஓவரில் 34 ரன்.. மிரட்டல் சதம்.. ஹர்திக் பாண்டியா ருத்ர தாண்டவம்.. விஜய் ஹசாரே 2025

0
38
Hardik

தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபியில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பரோடா அணிக்கு அதிரடியான சதத்தை அடித்திருக்கிறார்.

இந்திய தேசிய அணிக்கு விளையாடும் வீரர்கள், போட்டி இல்லாத நேரங்களில் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன் அடிப்படையில் தற்போது ஹர்திக் பாண்டியா தனது பரோடா அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

தடுமாறிய பரோடா

இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த பரோடா அணி 136 ரன்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா 17 பந்துகளில் ஒன்பது ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த போட்டியில் பந்துவீச்சுக்கு அதிக சாதகமான நிலைமை காணப்பட்டது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களம் இறங்கினார். ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததாலும், விக்கெட்டுகள் வேகமாக விழுந்திருந்தாலும் முதலில் பொறுமையாக விளையாடினார்.

- Advertisement -

ஒரே ஓவரில் 34 ரன்கள்

இதைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இந்த நிலையில் ரகடே என்ற பவுலர் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் அடித்த ஹர்திக் பாண்டியா ஆறாவது பந்தையும் பவுண்டரிக்கு அடித்தார். அந்த ஒரு ஓவரில் மட்டும் அவர் மொத்தம் 34 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் இந்த ஒரு மாற்றத்தை செய்யுங்க.. வேற லெவல் பரபரப்பா இருக்கும் – அம்பயர் சைமன் டவுல் பேட்டி

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா சதம் அடித்தார். இறுதியாக 92 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் உடன் 133 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பரோடா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -