வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் வைபவ் சூரியவன்சி ஒரு தலைமுறை வீரர் என பாராட்டி பேசி இருக்கிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்தவர்களுக்கான பட்டியலில் 15 வயதான வைபவ் சூரியவன்சி இருக்கிறார். நேற்று லக்னோ அணிக்கு எதிரான மிக முக்கியமான ஆட்டத்தில் வெறும் 38 பந்தில் 93 ரன்கள் நொறுக்கி ஆச்சரியப்படுத்தினார்.
ரசிகராக மாறுகிறேன்
இந்த இளம் வயதில் இதுவரையில் கிரிக்கெட்டில் இவ்வளவு அதிரடியாகவும் துல்லியமாகவும் விளையாடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் இருந்ததில்லை. எனவே இவர் பல பெரிய ஜாம்பவான் வீரர்களையே ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து கிறிஸ் கெயில் பேசும்போது “நான் வைபவ் சூரியவன்சி விளையாடுவதை எவ்வளவு அதிகமாக பார்த்துக் கொண்டிருக்கிறேனோ, அந்த அளவிற்கு அதிகமாக அவருடைய ரசிகனாக நான் மாறிக் கொண்டிருக்கிறேன். உண்மையைச் சொன்னால் இந்த வயதில் அவர் விளையாடும் முறை மிகவும் ஆச்சரியமாக அசத்தலாக உள்ளது. இந்த வயதில் இப்படிப்பட்ட ஒருவரை நான் பார்த்ததில்லை”
பிசிசிஐ இதை செய்ய வேண்டும்
“அவருடைய பவர் ஹிட்டிங்கை வைத்து பார்த்தால் அவருடன் ஒப்பிட இப்போது வேறு யாரும் இல்லை. மேலும் அவர்தான் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்த வீரராகவும் இருக்கிறார். இவர்தான் இப்போது அதிக சிக்ஸர் அடித்த வீரராகவும் இருக்கிறார். யோசித்துப் பாருங்கள் இன்னும் எதிர்காலத்தில் அவர் என்னென்ன சாதனைகளை செய்யப் போகிறார் என்று”
இதையும் படிங்க : நானும் சூரியவன்சியும் பேசிக் கொண்டது இதுதான்.. கடைசியில் அந்த வேலையை அவர் செய்து விட்டார் – ஜெய்ஸ்வால் பேட்டி
“பிசிசிஐ அவரை சரியாக கவனித்து பராமரிக்க வேண்டும். அவரை போல் உலகில் வீரர்கள் வருவது கிடையாது. அவருடைய பேட் ஸ்பீடு, ஷாட் செலக்சன் மற்றும் பயமற்ற பேட்டிங் ஸ்டைலை வைத்து பார்க்கும் பொழுது அவர் ஒரு தலைமுறையில் ஒரு முறை மட்டுமே பிறக்கும் வீரர் என்று தெரிகிறது” எனக் கூறியிருக்கிறார்.






