சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக பாதியில் இருந்து வெளியேறினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் விளையாடாத நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடுவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பணிச்சுமை குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெர்னோன் பிலாந்தர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு பும்ரா கட்டாயம்
அசாதாரணமான பவுலிங் ஆக்சன் கொண்ட தனித்துவமான இந்தியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான பும்ரா முக்கியமான போட்டிகளில் அணிக்கு கட்டாயம் தேவைப்படுகிறார். இவரது பந்துவீச்சை பொறுத்தே இந்திய அணியின் வெற்றி சதவீதம் பெரும்பாலும் அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து பந்து வீசிய பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி போட்டியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் போட்டி அட்டவணைகள் இந்த காலண்டர் ஆண்டில் அதிகமாக இருக்கும் நிலையில் பும்ராவின் பணி சுமையை இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பாக கையாள வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வேகபந்துவீச்சாளர் பிலாந்தர் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
பணிச்சுமை இப்படி இருக்க வேண்டும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஒட்டுமொத்தமாக இந்திய அணி விளையாடும் ஆட்டங்களின் எண்ணிக்கையை பார்த்தால் இந்த காலண்டர் ஆண்டில் பணிச்சுமை மிக அதிகமாக இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் பும்ராவை எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்தது என்று நான் நினைக்கிறேன். நான் கூற வருவது என்னவென்றால் பும்ரா போன்ற ஒருவர் அனைத்து முக்கிய தொடர்களிலும் முக்கியமான போட்டிகளிலும் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
இதையும் படிங்க:இதை கவனிச்சீங்களா.. குறிப்பிட்ட மாநிலம் மட்டுமே இந்திய கிரிக்கெட்டை ஆதிக்கம் செய்யுது.. இவர்தான் வரணும் – பசித் அலி பேட்டி
எனவே போட்டிகளுக்கு இடையே அவரது பணிச்சுமை என்பது கட்டாயம் நிர்வகிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஐபிஎல் தொடர் வரும்போது அவர் அனைத்து ஆட்டங்களிலும் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே இந்த இடத்தில் அவரை முக்கிய போட்டிகளில் மட்டும் கிடைக்குமாறு செய்துவிட்டு மற்ற பந்துவீச்சாளர்களுக்கு குறைந்த அம்சம் கொண்ட போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கலாம் என்று கூறுகிறேன். இதன் மூலம் அவரது பணிச்சுமையை நிர்வகிக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.