கோச் ஸார் உங்களுக்கு சிரிப்பு அழகா இருக்கு.. எல்லாரும் வேற மாதிரி பண்ணிட்டீங்க – தோனி வாழ்த்து

0
6
Dhoni

நேற்று இந்திய அணி டி20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்று அசத்தியது. கோபியை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் தோனி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

டி20 வடிவத்திற்கு முதன்முதலாக நடத்தப்பட்ட உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு வென்றது. இதைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலும், தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலும் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளது.

- Advertisement -

கம்பீர் சாதனை

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றதற்கு பிறகு இந்திய அணி நிறைய வரலாற்று தோல்விகளை சந்தித்தது. இதன் காரணமாக அவர் மீது நிறைய விமர்சனங்கள் தற்போது வரையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த வருடம் அவருடைய பயிற்சியில் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. இந்த நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரை வென்று உள்ளது. இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து இரண்டு ஐசிசி தொடர்களை வென்ற ஒரே பயிற்சியாளராக கம்பீர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தோனி வாழ்த்து

இந்த நிலையில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள தோனி அதில் குறிப்பிடும் போது “அகமதாபாத்தில் புதிய வரலாறு உருவாகி உள்ளது. இந்திய அணியினருக்கும், ஆதரவு ஊழியர்களுக்கும் மற்றும் இந்திய அணியின் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் எல்லோரும் விளையாடுவதை பார்க்க முடிந்ததற்கு மகிழ்ச்சி”

இதையும் படிங்க : நாங்க ஒரு சிறந்த அணியால் தோற்கடிக்க பட்டிருக்கோம்.. சூர்யா டீம் நிச்சயம் இதுக்காக பெருமைப்படலாம் – சான்ட்னர் பேச்சு

“கோச் சாப், உங்கள் சிரிப்பு உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது. அந்த தீவிரத்துடன் கூடிய சிரிப்பு ஒரு கில்லர் காம்போ! மிகவும் செயல்பட்டு உள்ளீர்கள். அனைவரும் மகிழ்ந்து கொண்டாடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -