இந்திய கிரிக்கெட்

நான் முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பேன் என்று சொன்னேன்.. எனக்கு கடைசி வரை அந்த விஷயம் தெரியாது – ஹர்திக் பாண்டியா பேச்சு

நேற்று தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் 25 பந்துகளில் 73 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் அவர் இந்த போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா கார்பின் போஸ் பந்துவீச்சில் தான் உள்ளே வந்த முதல் பந்திலேயே இறங்கி வந்து நேராக சிக்ஸர் அடித்தார். அங்கு தொடங்கிய அவரது அதிரடி கடைசிவரையில் தொடர்ந்தது. மேலும் 16 பந்துகளில் அரை சதம் அடித்து அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை படைத்தார்.

முதலிலேயே சொன்னேன்

இதுகுறித்து பேசி உள்ள ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “போட்டிகளை வெல்வதற்காகத்தான் நாம் விளையாடுகிறோம். வெல்லும் போட்டிகளில் நம்முடைய பங்களிப்பு இருப்பது நமக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும். இந்தியராக இரண்டாவது அதிவேக அரை சதம் அடித்திருக்கிறேன் என எனக்கு தெரியாது. நான் உள்ளே செல்லும் பொழுது அணியில் சொன்னார்கள். அதைக் கேட்டதும் அட முதல் இடத்தை தவற விட்டு விட்டோம் என்று தோன்றியது. ஆனால் அது யுவராஜ் சிங் பாயிடம் இருப்பது மகிழ்ச்சி”

“இன்று அந்த நாள் எனக்கு சரியாக இருக்கும் என உள்ளுணர்வு சொன்னது. எனவே நான் என்னுடைய பேட்டிங் பார்ட்னரிடம் முதல்பந்திலேயே இறங்கி வந்து சிக்சர் அடிப்பேன் என்று சொன்னேன். அதைச் செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது கணக்கிட்டு எடுத்த ஒரு ஆபத்தான முடிவு. ஆனால் அதிர்ஷ்டம் என் பக்கத்தில் இருந்தது”

- Advertisement -

சவால்களை சந்திப்பவன்

“எனக்கு சவால்களை சந்திப்பது எப்பொழுதும் பிடிக்கும். நான் சவால்களை எப்பொழுதும் ரசிக்கிறேன். இன்னும் சிறப்பாக திரும்பி வந்து சிறப்பான தாக்கத்தை உருவாக்குவதே என்னுடைய இலக்காக இருந்தது. எல்லாம் ஒன்றாக இணைந்து சிறப்பாக வரும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இத்துடன் பயணம் நிற்கப் போவது கிடையாது. திட்டமிடல், தயாரிப்பு மற்றும் கடின உழைப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : நான் முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பேன் என்று சொன்னேன்.. எனக்கு கடைசி வரை அந்த விஷயம் தெரியாது – ஹர்திக் பாண்டியா பேச்சு

இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா இரண்டு அரை சதங்கள் அடித்த போட்டியில் இந்திய அணி மிக எளிமையாக வெற்றி பெற்றது. அவர் தந்த தாக்கமே இந்த தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts