முத்தரப்பு கிரிக்கெட் தொடர்.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. தமிழக வீரர் உள்பட 6 புது வீரர்களுக்கு வாய்ப்பு

0
51

சாம்பியன்ஸ் டிராபி முன் பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆறு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்த தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோயிட்சே தற்போது முத்தரப்பு தொடருக்கு திரும்பி இருக்கின்றார்.

இந்தத் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 10ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா மோதுகிறது. இந்தப் போட்டிக்கான அணி மட்டும்தான் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டிருக்கிறது. இதில் ஸ்டார் வீரர்கள்  விளையாடுகின்றனர். இதனால் அந்த வீரர்கள் அனைவரும் எஸ் ஏ 20 தொடர் முடிவடைந்த பிறகு பாகிஸ்தானுக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

எஸ்ஏ 20 தொடரால் ஸ்டார் வீரர்கள் இல்லை:

தென்னாபிரிக்க அணியின் கேப்டனாக தெம்பா பவுவமா இந்த தொடரில் செயல்படுவார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய பீட்டர்ஸ் மற்றும் ஈத்தன் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று தமிழக வம்சாவளியை சேர்ந்த செனுரான் முத்துசாமி என்ற சுழற் பந்துவீச்சாளருக்கும் இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள மார்க்கோ யான்சன் எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ரபாடா, ரெகுல்டன் ஸ்டெப்ஸ் வெண்டர் டூசன் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கேசவ் மஹராஜ் மற்றும் ஹென்ரிச் கிளாசன் மட்டும் எஸ் ஏ டி20 தொடரிலிருந்து திரும்பி வரும் பிப்ரவரி 12ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் முத்தரப்பு போட்டியில் விளையாடுவார்கள்.

- Advertisement -

தென்னாப்பிரிக்க அணி விவரம்:

முத்தரப்பு தொடரின் முதல் ஒருநாள் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஈதன் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஜெரால்ட் கோட்ஸி, ஜூனியர் டாலா, வியான் முல்டர், மிஹ்லாலி மபோங்வானா, செனுரன் முத்துசாமி, கிடியோன் பீட்டர்ஸ், மீகா-ஈல் பிரின்ஸ், ஜேசன் ஸ்மித், கைல் வெர்ரைன்

சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், ட்ரைஸ்ஸென் ஸ்டிப்ஸ்ஸி, டப்ரைஸ் ஸ்டிப்ஸ்ஸி, டப்ரைஸ் ஸ்டிப்ஸ்ஸி.

- Advertisement -