இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பை பைனல்.. சூரியகுமார் கம்பீர் எடுத்த வினோத முடிவு.. இந்திய ரசிகர்கள் கவலை – என்ன நடந்தது?

இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. இந்த நிலையில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் எடுத்த முடிவு பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டு இருக்கிறது.

திரும்பி வந்த வீரர்கள்

கடந்த போட்டியில் இந்திய அணியில் ஓய்வு கொடுக்கப்பட்ட பும்ரா மற்றும் சிவம் துபே இருவரும் மீண்டும் இடம் பெற்று இருக்கிறார்கள். இறுதிப்போட்டியில் அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில் கம்பீர் மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக முழுமையான பேட்ஸ்மேனான ரிங்கு சிங் அணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்திய அணியில் தற்போது பும்ரா மட்டுமே முழு வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். இந்தியா பவுலிங் பவர் பிளேவை எவ்வாறு அமைக்கப் போகிறது? என்கின்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய ரசிகர்கள் கவலை

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் வேகப் பந்துவீச்சாளர் ஒருவரை தேர்வு செய்திருக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் கம்பீர் எட்டாவது இடம் வரையில் பேட்டி வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.

இதையும் படிங்க : பும்ரா விஷயத்தில் சூர்யா இப்படி நடந்துக்கிட்டா.. டி20 உலகக் கோப்பை ஜெயிக்க முடியாது – கைப் அதிரடி

ஏற்கனவே பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பும்ரா வரையில் மிகச் சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு வேகப் பந்துவீச்சாளரை தேர்வு செய்யாதது இந்திய ரசிகர்களை பெரிய அளவில் கவலை அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts