தற்போது இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவிக்காதது மெல்ல மெல்ல சர்ச்சையானதாக மாறி வருகிறது. டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்த காரணத்தினால் அவருக்கு ஆதரவாக நிறைய குரல்கள் வருகிறது. இந்தியா மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ஹர்திக் பாண்டியாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் மற்றும் தற்பொழுது நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடர இரண்டுக்கும் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே இருந்தார். மேலும் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு தொடர்ந்து 14 மாதங்கள் இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா இருந்து வந்தார். இந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வு பெற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு தராதது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு சூரியகுமார் யாதவ் உள்நாட்டு கிரிக்கெட் நிறைய விளையாடியிருக்கிறார் மேலும் மும்பை அணியை வழிநடத்துவும் செய்திருக்கிறார். எனவே அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது.மேலும் வீரர்களிடமிருந்து சிறந்ததை எப்படி கொண்டுவருவது என்பது குறித்தும் ஒரு கேப்டனாக அவருக்கு தெரியும்.
தற்போது சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டு இருப்பதில் எந்த தவறும் கிடையாது. அவர் கேப்டனாக இந்திய அணிக்கு சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன்.ஆனால் அதே சமயத்தில் கேப்டன் பொறுப்பில் விலக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த விஷயத்தில் அநீதி நடந்திருக்கிறது என்றும் உணர்கிறேன்.
ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக இல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் கடந்த டி20 உலக கோப்பை தொடருக்கு ரோகித் சர்மா வராமல் இருந்திருந்தாலும், மேலும் அந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா காயம் அடையாமல் இருந்திருந்தாலும், அவரே இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்திருப்பார் என்பது முக்கியமானது.
இந்திய அணி கேப்டன் விஷயத்தில் இந்த திசையில் செல்வதும், தேர்வாளர்கள் இப்படி ஒரு வழியை கண்டுபிடித்ததும் எனக்கு சிறிது கவலையை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியாவிடம் தேர்வுக்குழு தலைவரும் மற்றும் இந்திய பயிற்சியாளரும் இது குறித்து பேசி இருக்கிறார்கள் என்பதும் நாம் வெளியில் படித்து தெரிந்து கொண்டோம்.
இதையும் படிங்க : இந்திய அணி வரலனா.. அந்த 3 டீம்களும் பாகிஸ்தான் வர மாட்டாங்க.. முன்னாள் பாக் கிரிக்கெட் சேர்மன் வருத்தம்
நீங்கள் ஒரு வீரராக தேர்வாளர்கள் மற்றும் புதிய பயிற்சியாளர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்று புரிந்து கொள்கிறீர்கள். இருந்தாலும் கூட தன்னை டி20 அணியின் கேப்டன் பொறுப்புக்கு கொண்டு வராதது ஹர்திக் பாண்டியாவை மிகவும் வேதனைப்படுத்தி இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






