இன்னும் 1 விக்கெட்.. மகத்தான சாதனைக்கு காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா.. நடக்குமா இன்று?

0
79
Hardik

இன்றைய டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மிக முக்கிய போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு மிகப்பெரிய சாதனை ஒன்று காத்திருக்கிறது.

இந்தியாவில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து அந்த அணியில் கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்டியா. ஆனால் அவரது இந்த முடிவு பெரிய அளவில் அவருக்கு பின்னடைவை இந்த வருடம் கொடுத்தது.

- Advertisement -

மும்பை இந்தியன் ஆனியன் கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது பேட்டிங் பந்து வீச்சு என எல்லாவற்றிலும் ஹர்திக் பாண்டியா மிகச் சுமாராக செயல்பட்டார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கௌரவமான முறையில் புள்ளி பட்டியலில் முடிக்க முடியாமல் வெளியேறியது.

இதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டி மற்றும் அயர்லாந்துக்கு எதிரான முதல் சுற்றுப்போட்டியில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். மேலும் பங்களாதேஷ அணிக்கு எதிராக பேட்டிங்கிலும் சிறப்பாக இருந்தார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் ஒரே ஒரு விக்கெட் கைப்பற்றினால், இரு நாடுகளுக்கு இடையேயான டி20 போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற மகத்தான சாதனையை படைப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2023 உ.கோ பைனல்ல நான் ஆடி இருந்தா கதையே வேற.. கண்டிப்பா இது நடந்திருக்கும் – ரிஷப் பண்ட் பேட்டி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு நாடுகளுக்கு இடையே அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் :

ஹர்திக் பாண்டியா 6 போட்டி 11 விக்கெட்
உமர் குல் 6 போட்டி 11 விக்கெட்
புவனேஸ்வர் குமார் 7 போட்டி 11 விக்கெட்
இர்பான் பதான் 3 போட்டி 6 விக்கெட்
அர்ஸ்தீப் சிங் 3 போட்டி 6 விக்கெட்